Ramanathapuram

News January 20, 2026

இராம்நாடு: கடன், வறுமை, தடை நீக்கும் முருகன் கோவில்!

image

தேவிபட்டினம், பெருவயல் விலக்கு அருகே உள்ளது ரண பலி முருகன் கோயில். பெருவயல் வந்த வாரியார் சுவாமிகள், “நான் எத்தனையோ தலங்களில் முருகனை தரிசித்திருக்கிறேன். ஆனால் வேலில் முருகன் உருவம் பதித்திருப்பதை பெருவயல் கோயிலில்தான் கண்டேன்”. இந்த வேலை வழிபாடு செய்வதால் பக்தர்கள் வாழ்வில் உள்ள கடன், வறுமை, சுபகாரியத் தடை, எதிரிகளின் தொல்லை போன்ற சத்ருக்களை இந்த வேல் சம்காரம் செய்கிறது என கூறியுள்ளார். *SHARE

News January 20, 2026

BREAKING: பரமக்குடி அருகே விபத்து; இருவர் பலி

image

நயினார்கோவில், மஞ்சகொல்லை கிராமத்தை சேர்ந்த தமிழரசன் மற்றும் அவரது நண்பர் மனோஜ்குமார், நேற்று இருவரும் பாண்டியூரில் இருந்து மஞ்சகொல்லை நோக்கி பைக்கில் சென்றனர். அப்போது அரசடிவண்டல் கிராமம் அருகே அக்கிரமேசி கிராமத்தை சேர்ந்த மனோஜ்குமார் ஒட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியதில் தமிழரசன், எதிரே டூவீலரில் வந்த மனோஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மனோஜ்குமார் மருத்துவமனையில் அனுமதி.

News January 20, 2026

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (ஜன.19) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News January 19, 2026

இராம்நாடு: ரூ.40 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

image

திருப்புல்லாணி அடுத்த தோப்புவலசை மீனவ கிராம கடற்கரையில் ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின் போது இலங்கைக்கு கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.40 லட்சம் மதிப்பிலான 116 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டு கடத்தல்காரர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 19, 2026

இராமநாதபுரம்: நாளைய மின்தடை பகுதிகள்

image

இராமநாதபுரம், கீழக்கரை ஏர்வாடி சுற்றுவட்டார பகுதிகள், ராஜசூரியமடை பகுதிகளில் உள்ள 110/ 33 – 11 என்ற துணை மின் நிலையங்கள், திருப்புல்லாணி ஊராட்சி பகுதியில் உள்ள ரெகுநாதபுரம் 33/11 என்ற துணைமின் நிலையம் மற்றும் தேரிருவேலி கிராம பகுதியில் உள்ள 110/ 33 – 11 துணை மின் நிலையங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். *ஷேர் பண்ணுங்க

News January 19, 2026

ராமநாதபுரம்: இலவச வக்கீல் வேணுமா? இத தெரிஞ்சுக்கோங்க..

image

ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.ராமநாதபுர மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04567-230444
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
4.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 19, 2026

ராம்நாடு: ரீச்சார்ஜ் செய்ய இனி Gpay, Phonepe, Paytm தேவையில்லை!

image

ராம்நாடு மக்களே, இனி ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலம் ரீசார்ஜ், டேட்டா இருப்பு மற்றும் புகார்களைத் தீர்க்க வழி உண்டு.
ஜியோ: 70007 70007
ஏர்டெல்: 2482820000
Vi: 96542 97000
இந்த எண்களுக்கு ‘Hi’ என அனுப்பினால், இனி Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே ரீசார்ஜ் செய்யலாம், மேலும் இந்த ஆப்களில் கூடுதலாக செலுத்தும் கட்டணத்தை தவிர்க்கலாம். உங்க டேட்டா பேலன்ஸ் ஆகியவற்றை தெரிஞ்சுக்கலாம். SHARE IT.

News January 19, 2026

கமுதி: அடங்கல் சான்றிதழுடன் விவசாயிகள் போராட்டம்

image

கமுதி அருகே செய்யாமங்கலத்தில் மழையின்றி நெல் பயிர்கள் கடுமையாக கருகி சேதமடைந்துள்ளன. சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். பாதிப்பு கணக்கெடுத்து உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி, விவசாயிகள் தங்கள் வயல்களிலேயே அடங்கல் சான்றுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

News January 19, 2026

ராமநாதபுரம்: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ராம்நாடு மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 19, 2026

ராமநாதபுரம்: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

ராம்நாடு மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!