Ramanathapuram

News January 21, 2026

ராம்நாடு காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை

image

ஆர்.எஸ்.மங்கலத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் அர்ச்சுனன் வீட்டில், அவர் வெளியூர் சென்றிருந்தபோது 160 பவுன் நகை மற்றும் 18 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க எஸ்.பி. உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சந்தேகத்திற்குரிய 100-க்கும் மேற்பட்ட நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 21, 2026

ராமநாதபுரத்தில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஸ்போர்ட் எடுக்க வசதியாக நடமாடும் பாஸ்போர்ட் சேவை மையம் இப்போது தொண்டியில் (ஜன. 20, 21) செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகின்றது. ஆன்லைனில் Location 2 RPO Mobile Van Thondi TNO2CA7837 என்பதை தேர்வு செய்து முன்பதிவு செய்துவிட்டு காவல் நிலைய வளாகத்தில் உரிய ஆவணங்களுடன் செல்ல வேண்டும் என நிர்வாகம் அறிவிப்பு.

News January 21, 2026

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 20) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News January 20, 2026

ராமநாதபுரம்: NO EXAM.. ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை ரெடி!

image

தமிழ்நாடு சுகாதார துறையில் (TN MRB) காலியாக உள்ள 999 Nursing Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளம் ரூ.15,700 – ரூ.58,100 வரை வழங்கப்படும். இதற்கு 10th, Nursing Assistants course முடித்தவர்கள் பிப்.8க்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மார்க் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News January 20, 2026

இராம்நாடு: தவறுதலாக அனுப்பிய பணத்தை திரும்ப பெற..!

image

இராம்நாடு மக்களே; செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணா பிறருக்கும் பயன்படும்.

News January 20, 2026

இராமநாதபுரம்: லஞ்சம் பெறுவதில் சாதனை!

image

தமிழ்நாட்டில் லஞ்ச வழக்குகள் பதிவில் ராமநாதபுரம் மாவட்டம் 2 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடம் பிடித்து சாதனை. இதனை மாற்ற பிறப்பு, இறப்பு, திருமண பதிவு, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது போன்றவைகளை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் 04567-230036 புகாரளிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 20, 2026

இராம்நாடு: உங்கள் பகுதியில் கழிவுநீர், குடிநீர் பிரச்னையா?

image

இராம்நாடு மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த லிங்கை<> CLICK <<>>செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

News January 20, 2026

இராம்நாடு: அரசு வீடு பெற வாய்ப்பு; 6 ஊராட்சிகளுக்கு மட்டுமே!

image

திருப்புல்லாணி யூனியன் குதக்கோட்டை ஊராட்சி சமத்துவபுரத்தில் 100 வீடுகள் கட்டப்பட்டு, 84 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 16 வீடுகளுக்கு தகுதியான விண்ணப்பங்கள், சுற்றியுள்ள 6 ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள்
( குதக்கோட்டை, சின்னாண்டிவலசை, மேத லோடை, தாதனேந்தல், உத்தரவை, வண்ணாங்குண்டு) ஜன.23ம் தேதிக்குள் தேவையான சான்றுகளுடன் திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். *ஷேர் பண்ணுங்க

News January 20, 2026

பரமக்குடியில் மின்சாரம் தாக்கி பெண் மற்றும் நாய் பலி

image

பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமம் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்த சண்முகவள்ளி (50). நேற்று ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது வயலில் அறுந்து மின்கம்பியை கவனிக்காமல் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த நாயும் மின்கம்பியில் சிக்கி இறந்தது. தகவலறிந்த பரமக்குடி போலீசார் உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News January 20, 2026

இராம்நாடு: பெண்களுக்கு ரூ.5000 + ரூ.6000!

image

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் மூலம் கர்ப்பிணிகளுக்கு (5000+6000) வழங்கப்படுகிறது. இதன்படி கருவுற்ற பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 தவணைகளில் ரூ.5,000 வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக இருந்தால், அதற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகே உள்ள சுகாதார மையத்திலோ (அ) இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணபிக்கலாம். இதை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!