India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் தொடர்பான சிறப்பு தீவிர முகாம் ஜன.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பு ஜன.18 வரை இருந்த அவகாசம் தற்போது விரிவாக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்கவும், தவறுகளை சரி செய்வதற்காக உதவி வாக்காளர் பதிவு அலுவலகம், தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் அணுகலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி 21) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

தேவகோட்டையை சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி பாரதி(28). இவர், நேற்று கட்டடப் பணிக்காக திருவாடானை அருகே கல்வழியேந்தல் கிராமத்திற்கு வந்தார். கட்டடத்ததிற்கு தண்ணீர் எடுக்க அருகேயுள்ள கண்மாயிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது, கண்மாய்க்குள் தவறி விழுந்தவர் மூழ்கி உயிரிழந்தார். திருவாடானை போலீசார் உடலை கைப்பற்றி, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் நாட்டின் 77-வது குடியரசு தின விழா ஜன.26 அன்று கொண்டாடபட உள்ளது. இதையொட்டி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தை தயார் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. தொடர்ந்து விருந்தினர்கள் வந்து செல்வவது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இராமநாதபுரம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

தேசிய அளவில் நீர் மேலாண்மையில் முதலிடம் பிடித்த இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மத்திய அரசு ரூ.10கோடி வழங்கியது. இதற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோனிடம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.இ ந்த பரிசு தொகையானது மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளுக்காக பயன்படுத்தபடும் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.

இராமநாதபுரம் மாவட்டம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் (ஜன, 23) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இராமநாதபுரத்தில் நடைபெற உள்ளது. 18 முதல் 40 வயது வரை உள்ள, தகுதி வாய்ந்த நபர்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் நாட்டின் 77-வது குடியரசு தின விழா ஜன.15 அன்று கொண்டாடபட உள்ளது. இதையொட்டி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தை தயார் செய்யும் பணி நேற்று நடைபெற்றது. தொடர்ந்து விருந்தினர்கள் வந்து செல்வவது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக மைதானத்தை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

ராமேஸ்வரம் கடலில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 7 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சுற்றி வளைத்தது. இலங்கை கடற்படை. விசைப்படகுடன் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை, நடுக்கடலில் விசாரணை நடத்தி வருகிறது.
Sorry, no posts matched your criteria.