Pondicherry

News March 20, 2024

புதுச்சேரியில் பொறுப்பு கவர்னர் நியமனம்

image

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்தர்ராஜன் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய கவர்னர் பொறுப்புக்களை ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கவர்னர் நியமிக்கபடும் வரை அவர் இந்த பொறுப்புக்களை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் வருகின்ற வெள்ளிக்கிழமை பதவி ஏற்கிறார். 

News March 20, 2024

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: திமுக தேர்தல் அறிக்கை

image

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் குறிப்பாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

News March 20, 2024

மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கல்

image

புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட வீராம்பட்டினம் பகுதியில் அமைந்திருக்கும் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் அரசு உயர் நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு புதுச்சேரி மீனவர் கலை இலக்கிய ஆய்வு மையம் சார்பில் எழுது பொருட்கள் இன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

News March 20, 2024

இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க<> கிளிக் <<>>செய்யவும்.

News March 19, 2024

புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமம்

image

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை செளந்தரராஜன் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். புதுச்சேரி மக்கள் என் மீது அன்பை பொழிந்தனர். அந்த அன்பு எப்போதும் தொடரும், ஆனால் புதுச்சேரியை விட்டு செல்வது மனதுக்கு சிரமமாகத்தான் இருக்கின்றது, மாளிகை வாழ்க்கையை விட்டு மக்கள் பணிக்கு செல்கின்றேன் ஆகவே நாளை தமிழக பாஜக அலுவலகம் செல்கின்றேன் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்வேன் என்றார்.

News March 19, 2024

பாராளுமன்ற தேர்தல் குறித்து பாஜக ஆலோசனை கூட்டம்

image

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி மாநில பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோரின் தலைமையில் இன்று பாராளுமன்ற தேர்தல் சம்மந்தமான ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் செல்வ கணபதி, பாஜக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

News March 19, 2024

புதுவை: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

image

நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் புதிய கலெக்டர் அலுவலகத்தில் நாளை தொடங்கி 27ஆம் தேதி வரை காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு இடைவெளியின்றி வேட்புமனு பெறப்படுகிறது. 23ஆம் தேதி, 24ஆம் தேதி விடுமுறை நாட்களில் வேட்புமனு பெறப்படாது. இந்நிலையில்,  வேட்புமனு பெறும் ஏற்பாடுகளை தேர்தல் துறை தீவிரமாக செய்து வருகிறது.

News March 19, 2024

புதுவை: மதுபானக் கடைகளை இரவு 10 மணிக்கு மூட உத்தரவு

image

புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து வகையான மதுபானக் கடைகளும், இரவு 10.00 மணிக்கு மூட வேண்டும் என புதுச்சேரி கலால்துறை சார்பில் உத்தரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறும் மதுபான கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்க்கப்பட்டுள்ளது.

News March 19, 2024

புதுச்சேரியில் வேகமாக பரவும் பொன்னுக்கு வீங்கி நோய்

image

புதுவையில் மம்ப்ஸ் எனப்படும் வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோய், கழுத்துக்கு மேற்புறமாக காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த வீக்கம் உருவாகி கடுமையான வலி காய்ச்சல் உருவாகும். இருமல், தும்மல் மூலம் மற்றவர்களுக்கு எளிதாக பரவும். இதற்கு பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று புதுவை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

News March 19, 2024

புதுச்சேரிக்கு புதிய ஆளுநர்

image

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னராக இருந்த தமிழிசை நேற்று( மார்ச் 18) தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.இந்நிலையில் இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட திரவுபதி முர்மு, இந்த இரு மாநிலங்களின் கவர்னர் பொறுப்பை கூடுதலாக ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கி இன்று உத்தரவிட்டு உள்ளார்.

error: Content is protected !!