Pondicherry

News January 4, 2026

JUST IN புதுவை: ஒரு IPS அதிகாரி உட்பட 3 பேர் பணியிட மாற்றம்

image

புதுச்சேரியில், தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளை கடுமையாக கண்டித்ததன் முலம் பிரபலமான பெண் IPS அதிகாரி ஈஷா சிங் டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு IAS அதிகாரி, ஈஷா சிங் உட்பட 2 IPS அதிகாரிகளும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News January 4, 2026

புதுவை: செவிலியர் பணி குறித்து இணையத்தில் வெளியீடு

image

புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செவிலியர் பதவிக்கான நேரடி நியமனத்திற்கு விண்ணப்பித்தவர்கள், வழங்கப்பட்ட தற்காலிக மதிப்பெண்கள் மற்றும் முன்மொழியப்பட்ட இட ஒதுக்கீடு ஆகியவை அதிகாரப்பூர்வ இணையதளமான www.igmcri.edu.in இல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான ஆட்சேபனைகளை ஜன.10-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 4, 2026

புதுச்சேரி: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

image

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734, Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221, Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

புதுச்சேரி: 12th தகுதி.. ரயில்வே வேலை ரெடி!

image

புதுச்சேரி மக்களே, இந்தியன் ரயில்வேயில் பல்வேறு பணிகளுக்கு 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு குறைந்தது 18 வயது நிரம்பிய, 12வது படித்தவர்கள் <>இங்கு <<>>கிளிக் செய்து, வரும் ஜன.29-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.35,400 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். இந்த நல்ல தகவலை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News January 4, 2026

புதுவை: பள்ளியில் மண்டல அறிவியல் கண்காட்சி

image

புதுவை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மண்டல அறிவியல் கண்காட்சி, வரும் 6ந் தேதி முதல் 8ந் தேதி வரை நடக்கிறது. ஒன்று முதல் 5ம் வகுப்பு, 5 முதல் 8ம் வகுப்பு, உயர்நிலை, மேல்நிலை, ஆசிரியர்கள் என 5 பிரிவுகளில் கண்காட்சி நடைபெறும். ஒரு பள்ளியிலிருந்து தனித்தனியாக ஒரு படைப்பு இடம்பெறும் என்றார்.

News January 4, 2026

புதுச்சேரி: எஸ்பி சுப்ரமணி மீது பாலியல் புகார்

image

புதுச்சேரி தெற்கு காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) சுப்ரமணி மீது ஒரு பெண் காவலரின் தாய் பாலியல் தொடர்பான புகார் அளித்துள்ளார். இதையடுத்து, புதுச்சேரி டிஜிபி உடனடியாக உட்புகார் குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். எஸ்பி சுப்ரமணி, பெண் காவலருக்கு அனுப்பிய மெசேஜ்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

News January 4, 2026

புதுச்சேரி: எஸ்பி சுப்ரமணி மீது பாலியல் புகார்

image

புதுச்சேரி தெற்கு காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) சுப்ரமணி மீது ஒரு பெண் காவலரின் தாய் பாலியல் தொடர்பான புகார் அளித்துள்ளார். இதையடுத்து, புதுச்சேரி டிஜிபி உடனடியாக உட்புகார் குழுவை அமைத்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். எஸ்பி சுப்ரமணி, பெண் காவலருக்கு அனுப்பிய மெசேஜ்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

News January 4, 2026

புதுச்சேரி: ரூ.64,000 சம்பளம்; நாளை கடைசி நாள்!

image

பேங்க் ஆப் இந்தியா (BOI) வங்கியில் காலியாக உள்ள Credit Officers பணியிடங்கள் நிரப்பபட உள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 514
3. வயது: 25-40
4. சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி:05.01.2026
7.மேலும் தகவலுக்கு: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 4, 2026

புதுச்சேரி: பொங்கல் தொகுப்பு விநியோகம் ரத்து

image

புதுச்சேரி அரசு குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில், ரூ.800 மதிப்புள்ள பொங்கல் தொகுப்பை சனிக்கிழமை மாலை முதல்வர் ரங்கசாமி திலாசுபேட்டை ரேஷன் கடையில் தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாகக் கூறி, அதிகாரிகள் அங்கிருந்த எல்லா பொருள்களையும் ரேஷன் கடையில் வைத்துப் பூட்டிச் சென்றனர். இந்த நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

News January 4, 2026

காரைக்கால்: கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க அறிவிப்பு

image

காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், கார்னிவல் – “2026” கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விருப்பமுள்ள உள்ளுர் கலைஞர்கள் தங்களின் விண்ணப்பத்தினை, நாளை (05.01.2026) திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்குள் காரைக்கால் மாவட்ட கலை பண்பாட்டுத்துறை அலுவலகத்தில் சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

error: Content is protected !!