Pondicherry

News January 5, 2026

புதுச்சேரியில் ஆறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

image

தென் கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளது. இதன் காரணமாக இன்று திங்கட்கிழமை முதல், வரும் 10ஆம் தேதி வரையிலான 6 நாட்களில் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, தென்மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.

News January 5, 2026

புதுச்சேரி: பொங்கல் தொகுப்பை வழங்கிய முதலமைச்சர்

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 பொருட்கள் அடங்கிய தொகுப்பை, திலாஸ்பேட்டையில் உள்ள நியாவிலைக்கடையில் முதலமைச்சர் ரங்கசாமி பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், துறையின் அமைச்சர் திருமுருகன், அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News January 5, 2026

புதுவை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

கூகுளில் <>mylpg<<>> என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 5, 2026

புதுவை: ஒப்பந்த பயிற்சியாளர் பணிக்கு அழைப்பு

image

புதுவை மாநிலத்தில் கேலோ இந்திய மையம் நிறுவப்பட உள்ளது. இதில் புதுவை (கால்பந்து), காரைக்கால் (பேட்மிட்டன்), மாகே (கைப்பந்து), ஏனாம் (தடகளம்) என 4 மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 11 மாதத்துக்கு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். director-sports@py.gov.in என்ற மின்னஞ்சலுக்கு விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும் என புதுவை விளையாட்டு இளைஞர் நலத்துறை இயக்குநர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

News January 5, 2026

புதுவை: SI பணிக்கான எழுத்து தேர்வு தேதி அறிவிப்பு

image

புதுவை காவல்துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேரடியாக SI-க்கள் தேர்வு செய்ய கடந்த ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. இந்த பணிக்கு வரும் பிப்ரவரி 22-ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என தேர்வாணைய சார்பு செயலர் ஜெய்சங்கர் நேற்று அறிவித்துள்ளார். இதனால் SI பணிக்கு விண்ணப்பித்த இளைஞர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News January 5, 2026

புதுச்சேரியில் இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு!

image

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.800 மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த பரிசுத்தொகுப்பில் 4 கிலோ அரிசி, 1 கிலோ நாட்டுச் சர்க்கரை, 1 கிலோ பாசிப்பருப்பு, 1 கிலோ சூரியகாந்தி எண்ணெய், 300 கிராம் நெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும். இந்த தொகுப்பு இன்று திலாஸ் பேட்டை பகுதியில் முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 5, 2026

புதுச்சேரி: தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் MLA

image

புதுச்சேரியைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் நெட்டப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெரியசாமி மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரி சந்திரன் ஆகியோர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகின்றனர். இந்த நிகழ்வு, தவெக தலைவர் விஜயின் முன்னிலையில் தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News January 5, 2026

புதுவை: போனில் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 5, 2026

வில்லியனுார்: மனைவி பணம் தராததால் கணவன் தற்கொலை!

image

வில்லியனூர் பைபாஸ், பாரதி நகரைச் சேர்ந்தவர் சக்திவேல் (36). இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்லாமல், குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பணம் தராததால் மனைவியுடன் கோபித்துக்கொண்டு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 5, 2026

புதுச்சேரியில் மாணவர் ஆர்ப்பாட்டம்

image

வெனிசுலா நாட்டின் வளங்களை திருடும் நோக்கில், போர் வெறி பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டிப்பதாகவும், கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பை நிறுத்த கோரியும் புதுச்சேரியில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

error: Content is protected !!