India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெரம்பலூா் மாவட்ட சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.அனிதா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், எஸ்.பி-யின் உத்தரவின்படி தலைக்கவசம் அணியாதவா்கள் ரூ.2,500 அபராதம் செலுத்தினால் மட்டுமே வாகனங்கள் விடுவிக்கப்படுவதாக பரவி வரும் தகவல் போலியானது எனவும் தெரிவித்துள்ளார்.

செட்டிகுளம் குன்னமேடு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (20). ஐ.டி.ஐ-க்கு சென்ற இவர், வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் தேடியுள்ளனர். இந்நிலையில், அவரது புத்தகப் பை மற்றும் செல்போன் செட்டிகுளத்தில் உள்ள கிணற்றின் அருகே கிடப்பதாக உறவினர்கள் தெரிவித்ததை அடுத்து, தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் தேடினர். அதில், அன்பழகன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பொங்கல் பரிசு தொகுப்பு அந்தந்த நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடந்த எட்டாம் தேதி, முதல் நாள் வழங்கப்பட்ட குடும்ப அட்டைகளின் தரவரிசை பட்டியலில் பெரம்பலூர் மாவட்டம் எட்டாம் இடம் பிடித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது, புகழ்பெற்ற சிறுவாச்சூர் மதுர காளியம்மன் திருக்கோயில், இந்த கோயிலுக்குச் சென்றால் ஏவல், பில்லி, சூனியம், தடைகள் நீங்கும், ஞானம், வெற்றி, மன அமைதி உண்டாகும், புதிய முயற்சிகளுக்கு நல்ல தொடக்கம் கிடைக்கும், குழந்தை பாக்கியம், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற பல ஆன்மிக, மன நல நன்மைகளை பெறலாம் என்று ஆற்றல் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Laboratory Assistant, Senior Ship Draftsman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 132
3. வயது: 18 – 35
4. சம்பளம்: ரூ 22,500 – ரூ 77,000/-
5. கல்வித்தகுதி: டிப்ளமோ, Any Degree
6. கடைசி தேதி: 12.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், எண்ணெய் பனைத்திட்ட மூலம் மானிய விலையில் எண்ணெய் பனைக்கன்றுகள் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அழைப்பு விடுத்துள்ளார்.

பெரம்பலூர் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

பெரம்பலூர் மட்டத்தில் சில வாட்ஸாப்ப் குழுக்கள், முகநூல் பக்கங்களில் புதிதாக வந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருசக்கர வாகன ஓட்டிகள், தலைக்கவசம் அணியாதவர்கள், வாகன உரிமம் இல்லாத வண்டிகள் ஆகியவற்றை, பறிமுதல் செய்வதாகவும் அபராதம் ரூ.2500 செலுத்தினால் மட்டுமே வாகனங்கள் வழங்கப்படும், என்ற தவறான செய்தி பரவி வருகிறது. இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.