Perambalur

News January 11, 2026

பெரம்பலூர்: மாணவர் சடலமாக மீட்பு

image

பெரம்பலூர், செட்டிகுளத்தை சேர்ந்த கிராம உதவியாளர் லிங்கன் என்பவரது மகன் அன்பழகன் (21). கடந்த ஜன.1-ம் தேதி குடும்ப தகராறு காரணமாக வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் வீட்டிலிருந்து 200மீ தூரத்தில் உள்ள கிணற்றின் அருகே அவரது கைப்பேசி மற்றும் செருப்பு கிடந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, கிணற்றில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

News January 11, 2026

பெரம்பலூர்: மாணவர் சடலமாக மீட்பு

image

பெரம்பலூர், செட்டிகுளத்தை சேர்ந்த கிராம உதவியாளர் லிங்கன் என்பவரது மகன் அன்பழகன் (21). கடந்த ஜன.1-ம் தேதி குடும்ப தகராறு காரணமாக வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் வீட்டிலிருந்து 200மீ தூரத்தில் உள்ள கிணற்றின் அருகே அவரது கைப்பேசி மற்றும் செருப்பு கிடந்துள்ளது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, கிணற்றில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

News January 10, 2026

பெரம்பலூர்: சகல தோஷங்கள் நீக்கும் அற்புத கோயில்!

image

பெரம்பலூர் மாவட்டம் திருவலாந்துறையில் அமைந்துள்ளது சோழீஸ்வரர் ஆலயம், சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் உள்ள கிணற்றில் நீராடி மூலவருக்கு புது வஸ்திரம் சாற்றி, நெய் அபிஷேகம் செய்து பிராத்தனை செய்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

பெரம்பலூர்: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. APPLY

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை அறிய பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம்.SHARE பண்ணுங்க

News January 10, 2026

குடியரசு தின கொண்டாட்டத்திற்கு தயாராகும் பெரம்பலூர்

image

மக்களாட்சியின் மாண்பை சிறப்பிக்கும் வகையில், குடியரசு தினத்தையும் கொண்டாடி வருகிறோம். இந்த வகையில் ஜன.26 அன்று, குடியரசு தினத்தை நாடெங்கும் கோலாகலமான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. அவற்றின் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட சார்பில், இந்திய திருநாட்டில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டதற்கான பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஜன.9-ஆம் தேதி நடைபெற்றது.

News January 10, 2026

பெரம்பலூர்: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

image

பெரம்பலூர் மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News January 10, 2026

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மானிய விலையில் எண்ணெய் பனை கன்றுகள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ந.மிருணாளினி தெரிவித்துள்ளார். மானிய விலையில் ஒரு எக்டேருக்கு ரூ.29 ஆயிரம் எண்ணெய் பனை கன்றுகள் வழங்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே எண்ணெய் பனை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு எக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.5,250 வழங்கப்பட உள்ளது. மேலும், தகவலுக்கு வட்டார தொட்டக்கலை உதவி இயக்குனரை அனுகவும்.

News January 10, 2026

பெரம்பலூர்: வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு

image

பெரம்பலூர் மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

பெரம்பலூர்: போக்சோ – முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

image

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவியிடம் கடந்த ஆண்டு வேப்பந்தட்டையை சேர்ந்த ரத்தினம் (60) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரை அடுத்து அவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ரத்தினத்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News January 10, 2026

பெரம்பலூர்: அரசுப் பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு

image

பெரம்பலூர் மாவட்ட மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!