Tamilnadu

News January 1, 2026

கோபிசெட்டிபாளையம் அருகே மிதித்து கொன்ற யானை

image

கோபிசெட்டிபாளையம் அடுத்த தொட்டகோம்பை பகுதியைச் சேர்ந்தவர் சின்னலட்சுமணன். இவர் தொட்டகோம்பை வனப்பகுதிக்குள் விறகு எடுப்பதற்காக சென்று விட்டு வீடு திரும்பாததால் உறவினர்கள் அக்கம் பக்கம் தேடிப் பார்த்துள்ளனர். அப்பொழுது வனப்பகுதியில் யானை தாக்கி உயிர் இழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 1, 2026

மயிலாடுதுறை மாவட்டத்தில் 103 பலி

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் போக்குவரத்து சாலை விபத்துகளை குறைத்திடும் பொருட்டு பொது இடங்களில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் பலனாக கடந்த 2024ல் பதிவு செய்யப்பட்ட 155 சாலை இறப்பு விபத்துகளை ஒப்பிடும்போது, 2025ல் 103 சாலை இறப்பு விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 34 சதவீதம் குறைவாகும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

News January 1, 2026

மதுரை: பிள்ளைகள் கைவிட்டதால்… மூதாட்டி சோக முடிவு!

image

பேரையூர் அருகே டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளையம்மாள்(93). கணவருடன் தனித்து வசித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரும் இறந்து போனார். இவரது குழந்தைகளில் சிலர் இறந்து போன நிலையில், இருக்கும் மற்ற குழந்தைகள் இவரை கவனிக்கவில்லை. இதனால் எருக்க இலையை அரைத்து குடித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் இறந்து போனார். இதுகுறித்து சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 1, 2026

திருவாரூர்: இலவச பட்டா வழங்கல்

image

முத்துப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட உதய மார்த்தாண்டபுரம் அரசுப் பள்ளியில், தெற்கு பள்ளி மேட்டுப் பகுதியைச் சேர்ந்த 42 பயனாளிகளுக்கு வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், இலவச குடிமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டு பட்டாக்களை வழங்கினர்.

News January 1, 2026

கிருஷ்ணராயபுரம் அருகே வசமாக சிக்கிய பெண்கள்!

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மேட்டு மகாதானபுரம் மற்றும் பில்லா பாளையம் பகுதியில் வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற லாலாபேட்டை போலீசார் மதுவிற்ற சங்கர் மனைவி அன்னக்கிளி (55), வாசுதேவன் மனைவி ரேவதி (55) ஆகிய இரண்டு பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 52 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

News January 1, 2026

திருப்பத்தூர்: பட்டப்பகலில் துணிகர சம்பவம்!

image

நாட்றம்பள்ளி அடுத்த அதிபெரமனூரை சேர்ந்தவர் மாணிக்கம் (61) இவர் வீட்டில் நேற்று (டிச.31) வாணியம்பாடி அருகே தும்பேரியை சேர்ந்த மீனா, பட்டப்பகலில் திறந்த வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் பீரோவில் வைத்திருந்த தங்க நகை & ரொக்க பணத்தை திருட முயன்றார். அப்போது வீட்டிற்குள் வந்த மாணிக்கம் மூதாட்டி கையும் களவுமாக பிடித்து நாட்றம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் மூதாட்டியை கைது செய்தனர்.

News January 1, 2026

ஸ்ரீபெரும்புதூர்: சாலை விபத்தில் வாலிபர் பரிதாப பலி!

image

திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த நரசிகப்புரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (28) லாரி கிளீனராக வேலை உள்ளார். நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்கு லாரியில் லோடு இறக்க வந்துள்ளார். அப்போது ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செட்டிபேடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 1, 2026

கிருஷ்ணகிரியில் 699 பேர் பலி!

image

கிருஷ்ணகிரியில் கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 699 பேர் பலியாகியுள்ளனர். அதே போல், கடந்த ஆண்டில் 50 கொலை வழக்குகளும், 37 கொலை முயற்சி வழக்குகளும், 19 வழிப்பறி வழக்குகளும் பதிவாகியுள்ளன. மேலும், மது விற்பனை, கடத்தல் தொடர்பாக 4,451 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து கஞ்சா விற்பனை, கடத்தல் தொடர்பான வழக்குகளில் 248 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக SP அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 1, 2026

தேனி: கிணற்றில் அழுகிய நிலையில் சடலம்….திடீர் திருப்பம்

image

போடியை சேர்ந்தவர் ரமேஷ், 2018ல் காணாமல் போனார். இவரது மனைவி மேகலா புகாரில் போலீசார் விசாரித்தனர். 2018 ல் வீரபாண்டி அருகே கிணற்றில் அழுகிய நிலையில் ரமேஷ் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதில் போடி பாண்டி என்பவர் சொத்து தகராறில் ரமேஷை கொலை செய்தது தெரிந்தது.இவ்வழக்கில் தொடர்புடையவர்களை நவம்பரில் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய சண்முகசுந்தரத்தை 37, கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 1, 2026

செங்கை: 6 வயது சிறுவனுக்கு பாலியல் சீண்டல்

image

சென்னை அஸ்தினாபுரத்தில் உள்ள சலூன் கடைக்கு முடி வெட்டச் சென்ற 6 வயது சிறுவனுக்கு, அங்கிருந்த 16 வயது வடமாநில சிறுவன் பாலியல் தொல்லை அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் அளித்த தகவலின் பேரில், அவனது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் சேலையூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த சிறுவனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!