Tamilnadu

News January 1, 2026

ராணிப்பேட்டை: சாவியால் சரமாரியாக தாக்கிய ட்ரைவர்!

image

சோளிங்கர் ரயில் நிலையம் அருகே பயணிகளை ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இதில் சூரைக்குளத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை, சக ஓட்டுநர் அருண் ஆட்டோ சாவியால் சரமாரியாகத் தாக்கினார். காது மற்றும் தோள்பட்டையில் பலத்த காயமடைந்த சந்தோஷ் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 1, 2026

தேனியில் அதிர்ச்சி….. 339 பேர் பலி

image

தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 28 கொலை வழக்குகள், 7 கொள்ளை வழக்குகள், 3 பெண்கள் வன்கொடுமை வழக்குகள், 35 போக்சோ வழக்கு என 81 வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. புகையிலை, போதைப்பொருட்கள் தொடர்பாக 2467 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஓராண்டில் 1239 வாகன விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 339 பேர் இறந்துள்ளனர்.

News January 1, 2026

விருதுநகர்: எஸ்.ஐ, ஏட்டு மீது வழக்கு பதிவு.!

image

அ.முக்குளம் எஸ்.ஐ., மணிகண்டன் வாக்கி டாக்கியை தொலைத்த விவகாரத்தில் தவக்கண்ணன் மீது பொய் வழக்கு பதியப்பட்டது. இதில் பொய் வழக்கு போட்ட போலீசாருக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் தவக்கண்ணன் வழக்கு தொடர்ந்ததில் எஸ்.ஐ.,மணிகண்டன், போலீஸ் ஏட்டு செல்வராஜ் மீது FIR பதிவு செய்ய ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டது. இவர்கள் இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 1, 2026

நாகை: 508 கிலோ கஞ்சா பறிமுதல்

image

நாகை மாவட்டத்தில் கஞ்சா போதைப் பொருட்களை ஒழிக்கும் பொருட்டு, 78 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 129 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 508 கிலோ கஞ்சா (மதிப்பு ரூ.50,85,600/-) மற்றும் 08 நான்கு சக்கர வாகனங்கள், 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 1, 2026

ராம்நாடு: தலையில் கல்லை போட்டு ஒருவர் கொலை

image

மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (46) என்ற மீனவர், நேற்று முன்தினம் இரவு சுந்தரமுடையான் பகுதியைச் சேர்ந்த மாலதி (36) என்ற பெண் குளித்து கொண்டிருந்தபோது அவரிடம் அத்துமீறி பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதால், ஆத்திரமடைந்த மாலதி மற்றும் அவரது தாய் ராக்கம்மாள் (70) ஆகிய இருவரும் கீழே கிடந்த கல்லை தலையில் போட்டதில் சம்பவ இடத்திலேயே வெள்ளைச்சாமி உயரிழந்தார்.

News January 1, 2026

குமரி: 11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர்!

image

கொல்லங்கோடு 16 வயது + 1 மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானவர் பாறசாலையைச் சேர்ந்த கப்பல் என்ஜினியராக பணிபுரியும் விஜேஷ் (20). கொல்லங்கோட்டில் உள்ள பாட்டி வீட்டிற்கு வந்த விஜேஷ், மாணவியை அங்கு அழைத்து திருமண ஆசை கூறி பாலியல் வன்புணர்வு செய்தார். இதில் மாணவி கர்ப்பமானார். இது குறித்து நேற்று குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் விஜேஷ் மீது வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.

News January 1, 2026

நெல்லை: இளைஞர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

image

மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை செய்து பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்த பேட்டையை சேர்ந்த இப்ராஹிம் ராசிக் (22) என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீசார் பரிந்துரைத்தனர். இதையடுத்து நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி ஆணைப்படி இப்ராஹிம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்து பாளை மத்திய தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.

News January 1, 2026

கடலூர்: 16 வயது சிறுமி கர்ப்பம்!

image

காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த அஜித் (25). இவர் 16 வயது சிறுமியை கடந்த 5 மாதமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் சிறுமியின் வீட்டிற்கு சென்று, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கருவுற்றார். இதுகுறித்து சிறுமியின் தாய் சேத்தியாதோப்பு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் அஜித் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 1, 2026

தி.மலைக்கு இன்று மழை எச்சரிக்கை!

image

இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையின் ஒரு சில பகுதியில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று தி.மலையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழையா என கமெண்டில் சொல்லுங்க.

News January 1, 2026

புதுகை: வடமாநில வாலிபருக்கு கத்திக்குத்து!

image

நமணசமுத்திரத்தில் ரெயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருபவர் தீரஜ்குமார் (31). இவர் வடமாநிலத்தை சேர்ந்தவர். இவர் நேற்று பணியில் இருந்த போது ரெயில் வந்ததால் ரெயில்வே கேட்டை மூடினார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கேட்டை திறக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தான் வைத்திருந்த கத்தியால் தீரஜ்குமாரை தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!