India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையின் ஒரு சில பகுதியில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று செங்கல்பட்டில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழையா என கமெண்டில் சொல்லுங்க.

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சம்பத்குமாா் (27). நெல் அறுவடை இயந்திரத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா். இவா் நேற்று, பம்புதோட்டம் -ரங்கநாதபுரம் சாலையில் சாலை விரிவாக்க பணிக்காக ஆலமரக் கிளையை வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மரத்தில் இருந்து தவறி விழுந்த சம்பத்குமாா் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் மதுவிலக்கு தொடர்பான குற்றம் செய்ததாக 1,566 பேர் மீது 1,173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 260 லிட்டர் சாராய ஊறல், 290 லிட்டர் சாராயம், 201 லிட்டர், 5,610 லிட்டர் மது மற்றும் 762 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மணல் கடத்தியதாக 775 பேர் கைது செய்யப்பட்டு 702 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையின் ஒரு சில பகுதியில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று சென்னையில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழையா என கமெண்டில் சொல்லுங்க.

குடியாத்தம் ஒன்றியம் உள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று 3 பேர் டிரான்ஸ்பார்மரில் ஏறி பொருட்களை திருட முயன்றனர். சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள் 3 பேரையும் பிடித்து குடியாத்தம் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் (20), சஞ்சய் (19), ராமஜெயம் (17) என தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் குடியாத்தம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.

திருச்சியின் முக்கிய நுழைவாயிலான அரியமங்கலம்-பால்பண்ணை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனை குறைக்கும் விதமாக இன்று முதல் திருச்சி கலைஞர் பேருந்து நிலையம்-தஞ்சாவூர் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் பால்பண்ணை சந்திப்பு வழியாக வராமல், துவாக்குடி-பஞ்சப்பூர் ரிங் ரோடு வழியாக செல்ல வேண்டும் என திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தகவல் தெரிவித்துள்ளார்.

கூடலுார் புத்துார்வயல் அருகே வடவயல் பகுதியை சேர்ந்தவர் குட்டிகிருஷ்ணன். தனது வீட்டில் தனியாக தங்கி இருந்தார். நேற்று காலை, அவரின் மைத்துனர் வீட்டுக்கு வந்து பார்த்த போது, முன் அறை இருக்கையில் நாட்டு துப்பாக்கியுடன் அமர்ந்தபடி முகத்தில்பலத்த காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என வந்துள்ளது.

புதுச்சேரி, திருபுவனை பகுதியில் உள்ள ஏரியில், ஆண் சடலம் மிதந்த நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருபுவனை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தை நீரில் இருந்து மீட்டனர். பின்னர் திருபுவனை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, திருபுவனை பகுதியில் உள்ள ஏரியில், ஆண் சடலம் மிதந்த நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருபுவனை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தை நீரில் இருந்து மீட்டனர். பின்னர் திருபுவனை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோபிசெட்டிபாளையம் அடுத்த தொட்டகோம்பை பகுதியைச் சேர்ந்தவர் சின்னலட்சுமணன். இவர் தொட்டகோம்பை வனப்பகுதிக்குள் விறகு எடுப்பதற்காக சென்று விட்டு வீடு திரும்பாததால் உறவினர்கள் அக்கம் பக்கம் தேடிப் பார்த்துள்ளனர். அப்பொழுது வனப்பகுதியில் யானை தாக்கி உயிர் இழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.