Tamilnadu

News January 1, 2026

நெல்லை: மது குடிக்க பணம் தராததால் தற்கொலை!

image

களக்காடு பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் ராஜா (29). மது பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை கதிர்வேல் தனது தாயார் அருள் மாலாவிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அருள் மாலா பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கதிர்வேல் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து களக்காடு போலீஸார் விசாரனை.

News January 1, 2026

தி.மலை: டிரைவர் மீது கொலைவெறி தாக்குதல்!

image

கலசப்பாக்கம், ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் இருந்து தி.மலைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சாமிக்கண்ணு என்ற ஓட்டுநர் பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். சீராம்பாளையம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, கோதண்டம், முருகன் மற்றும் பழனிசாமி ஆகிய மூவரும் பேருந்தை ஏன் முன்கூட்டியே எடுத்தீர்கள் என கூறி ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படுகிறது. மூவரையும் கைது செய்த போலீசார் இது குறித்து விசாரிக்கின்றனர்.

News January 1, 2026

ராமநாதசுவாமி கோவிலில் திருட்டு.!

image

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கோவிலின் தூய்மை பணியாளர் பணி செய்யும் மணிகண்டன் என்பவர் உண்டியல் பணம் ரூ.1 லட்சத்தை திருடி உள்ளார். இதனை கோவில் அதிகாரிகள் சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்து காவல்நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 1, 2026

விழுப்புரத்தில் 339 பேர் கைது!

image

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 339 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், மாவட்டத்தில் 489 கொள்ளை, 21 வழிப்பறி, 468 திருட்டு என மொத்தம் 978 குற்றச்சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 20 ஆயிரத்து 545 மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தவிர 32 கொலை வழக்குகளில் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News January 1, 2026

கள்ளக்குறிச்சி: கர்ப்பமடைந்த காதலி – மிரட்டிய காதலன்!

image

பவுஞ்சிப்பட்டைச் சேர்ந்த அய்யனாரும் (29), 26 வயது இளம்பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு, திருமணம் செய்ய மறுத்து அய்யானாா் வெளிநாடு சென்றுவிட்டார். பின்னா் வீடு திரும்பிய அய்யனாா், அந்த பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் அய்யனார், அவரது குடும்பத்தினர் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

News January 1, 2026

புதுக்கோட்டை அருகே வாலிபர் பரிதாப பலி

image

குடுமியான்மலை அடுத்த குருக்களையாப்பட்டியைச் சேர்ந்தவர் அஜீத்குமார். இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் பெருமநாடு கிரசர் அருகே வந்தபோது ஆறுமுகம் என்பவரது  கடைக்கு முன் நின்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அஜீத்குமார் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.

News January 1, 2026

சென்னை: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாப பலி!

image

வளசரவாக்கம், காமராஜ் அவென்யூ பகுதியை சேர்ந்த ஜோதிராஜ் மகன் வீரகுமார் (15) இவர் 8ம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறை என்பதால், நண்பர் வீட்டுக்கு விளையாட சென்ற போது மாடி கைப்பிடி சுவர் அருகே சென்ற மின்கம்பியில் உரசியதில் அவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்ல, டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News January 1, 2026

கடலூர்: நகை திருடிய இளைஞர் அதிரடி கைது

image

சிதம்பரம் அருகே நற்கவந்தன்குடியை சேர்ந்தவர் செளந்தர்ராஜன்(51). கவரிங் கடையில் வேலை பார்க்கும் இவர், ரூ.3 லட்சம் மதிப்புள்ள கவரிங் நகைகளை தனது பைக்கில் வைத்துவிட்டு, மது அருந்த டாஸ்மாக் கடைக்கு சென்றார். அப்போது, மர்மநபர் கவரிங் நகைகளை திருடி சென்று விட்டார். இது குறித்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிந்து கவரிங் நகைகளை திருடிய கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்த பெருமாள்(30) என்பவரை கைது செய்தனர்.

News January 1, 2026

நீலகிரியில் இன்று ஒரு நாள் மட்டும் மூடல்

image

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான அவலாஞ்சி இன்று (ஜன.01) ஒரு நாள் மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள பவானி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற இருப்பதால் அதிகப்படியான உள்ளூர் மக்கள் வர இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு இடைஞ்சல் ஏற்படும் என கருதி ஒரு நாள் மட்டும் அவலாஞ்சி சுற்றுலா தளம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 1, 2026

குமரி: திடீரென நர்ஸ் தூக்கிட்டு தற்கொலை!

image

நெல்லை மாவட்டம் துறை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜசுரேகா (20) இவர் டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். கற்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த இவர் மருத்துவமனை மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறனர்.

error: Content is protected !!