Tamilnadu

News January 1, 2026

தருமபுரி: எமனாய் மாறிய நாய்- முதியவர் பரிதாப பலி!

image

கம்பைநல்லூர் அருகே எலவடையைச் சேர்ந்த விவசாயி மோகன் (52), மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அம்மாபேட்டை பிரிவு ரோடு அருகே திடீரென நாய் குறுக்கே வந்ததால், நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 1, 2026

செங்கல்பட்டு மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்

image

இன்று (வியாழக்கிழமை) முதல் 9 மின்சார ரெயில் சேவைகளில் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதன்படி செங்கல்பட்டிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் 6.05 மணிக்கும், 6.40 மணிக்கு புறப்படும் ரெயில் 6.30 மணிக்கும், 10.10 மணிக்கு புறப்படும் ரெயில் 10.20 மணிக்கும் புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News January 1, 2026

வேலூர்: வழிப்பறியில் ஈடுபட்ட இருவருக்கு வலை!

image

ஒடுகத்தூர் அருகே உள்ள ஒ.ராஜாபாளையம்-பின்னத்துரை செல்லும் வழியில் வனப்பகுதியில் ஒரு வாலிபரும், இளம்பெண்ணும் பேசி கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் இளம் பெண் மற்றும் வாலிபரை தாக்கி அவர்களிடம் இருந்து செல்போன்களை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர்கள் வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

News January 1, 2026

விழுப்புரத்தில் பயங்கர தீ விபத்து!

image

விழுப்புரம் மேல் தெரு பகுதியில், பழைய பேப்பர் குடோன் ஒன்றில் நேற்று (டி-31) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த ரூ.50,000 மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்தது. பின்னர் கரும்புகை வெளியேறியதும் இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே விழுப்புரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

News January 1, 2026

நாய்களின் கூடாரமாகிறதா சேலம்? மாநில அளவில் 2-ம் இடம்

image

சேலம் மாவட்டத்தில் கடந்த தகவலின்படி, ஜனவரி முதல் டிசம்பர் வரை 41,837 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழக அளவில் நாய்க்கடி பாதிப்பில் சென்னைக்கு அடுத்தபடியாக சேலம் மாவட்டம் 2-வது இடத்தில் உள்ளது. தெருநாய்களைக் கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News January 1, 2026

கள்ளக்குறிச்சியில் சட்டவிரோத மது விற்பனை அமோகம்!

image

கள்ளக்குறிச்சி: கச்சிராயப்பாளையம் அடுத்த மாதவச்சேரி, அம்மாபேட்டை பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபான பார் வைத்து நடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மாதவனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், போலீசார் அந்த கிராமங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், மாதவச்சேரியைச் சேர்ந்த குணசேகரன் மற்றும் அம்மாபேட்டையைச் சேர்ந்த செல்வகுமார் ஆகியோரை சட்டவிரோத மதுபான பார் நடத்தியதற்காக கைது செய்தனர்.

News January 1, 2026

விழுப்புரத்தில் அரை டன் போதைப்பொருள் பறிமுதல்!

image

பெங்களூருவிலிருந்து புதுச்சேரிக்கு, விழுப்புரம் வழியாக காரில் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் கடத்திச் செல்லப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 405 கிலோ போதைப்பொருட்களை பறிமுதல் செய்து, 3 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

News January 1, 2026

திருப்பத்தூரில் கரண்ட் கட் – உங்க பகுதி இருக்கா?

image

திருப்பத்தூர், கந்திலி, குரிசிலாப்பட்டு, புதூர்நாடு, வெலக்கல்நத்தம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, ஜன.3ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பத்தூர், மடவாளம், மாடப்பள்ளி, தாதனவலசை, கந்திலி, பாச்சல், ஜலகாம்பாறை, புதூர்நாடு, ஜெயபுரம், பைனப்பள்ளி, வெலக்கல்நத்தம், அன்னசாகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 1, 2026

திருவள்ளூரில் இன்று மழை வெளுக்கும்!

image

இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையின் ஒரு சில பகுதியில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று திருவள்ளூரில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழையா என கமெண்டில் சொல்லுங்க.

News January 1, 2026

தருமபுரி: தீப்பிடித்து எரிந்த வீடு!

image

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே தேவரெட்டியூரைச் சேர்ந்த தொழிலாளி சின்னராஜின் ஓட்டு வீடு, மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த விபத்தில் வீட்டிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!