India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் ராணிப்பேட்டை மக்கள் அனைவருக்கும் தனது 2026 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பிறக்கும் 2026 புத்தாண்டு அனைவர் வாழ்விலும் அமைதி, அன்பு, மகிழ்ச்சி மற்றும் வளத்தை நிறைக்கட்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் புத்தாண்டை பொறுப்புடன் கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டார்.

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆர் பணியின் போது, தொகுதி விவரங்களை சரியாக பூர்த்தி செய்யாமல் உள்ள 46,191 பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் வகையில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலமாக அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

குமரி மக்களே; உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு இங்கு <

தென்காசி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தென்காசி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000478, 9342595660 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

நெல்லை மக்களே, உங்களது பதிவுத்துறை தொடர்பான தேவைகளுக்கு இந்த லிங்கினை CLICK செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள். பதிவுத்துறை தொடர்பான புகார்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 9498452110 / 9498452120 / 9498452130 எண்களை அழைக்கலாம். (அரசு விடுமுறை தவிர; திங்கள் – வெள்ளி காலை 10 மாலை 5.45 மணி வரை). இந்த இணையதளம் மூலம் வழங்கப்படும் தகவல்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. *தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

தூத்துக்குடி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தூத்துக்குடி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000479, 9445000481, 9445000480 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று, ஆட்சியா் தினேஷ்குமாா் தலைமையில் எருதுவிடும் விழா குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாணவா்கள் எருதுகளைப் பிடித்து வருதல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதன்மூலம் பள்ளிக்கு செல்லும் மாணவா்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே மாணவா்கள், காளைகளைப் பிடித்து வருவதை முற்றிலுமாக தடுக்க விழாக் குழுவினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு ரயில் நிலையம் செல்வதற்கு தனியார் பஸ் தயார் நிலையில் நின்று இருந்தது. அப்போது அரசு மருத்துவமனை நோக்கி சென்ற அரசு பஸ் முந்தி செல்ல முயன்றது. எதிர்பாராத விதமாக 2 பஸ்களும் மோதிக்கொண்டன. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இரு பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதிமுக சார்பில் சமத்துவ நடை பயணம் திருச்சியில் நாளை (ஜன.2) தொடங்க உள்ளது. இதற்கான தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் தொண்டர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என, திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விருகம்பாக்கம் நாராயணசாமி தெருவை சேர்ந்தவர் சந்திர சேகர் (48) தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போது, கேஸ் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் பரவியுள்ளது. இந்நிலையில், வீடு திரும்பிய அவர் இதை கவனிக்காமல் டி.வி சுவிட்சை ஆன் செய்துள்ளார். இதனால் அறை முழுவதும் பரவி இருந்த கியாஸ் அதி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த அதிர்வால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு நிகழவில்லை.
Sorry, no posts matched your criteria.