India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல்-திருச்சி சாலை, நல்லுார் அருகே, 25 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர் சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த நாமக்கல் போலீசார், சடலத்தை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணை கால்வாய் பிணம் திண்ணி கால்வாய் என அழைக்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் நீச்சல் தெரியாமல் ஆர்வத்துடன் தண்ணீருக்குள் இறங்கி குளிக்கும்போது. இழுத்து செல்லப்படுகின்றனர். விழிப்புணர்வு தந்திருந்தாலும் பலரும் கேட்காமல் இங்கு குளிப்பதால் பலர் உயிரிழக்கும் நிலை உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 142 பேர் இதனால் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரியலூர் திருமானூரில் புதிய பேருந்து சேவைகள் மற்றும் ஏலாக்குறிச்சியில் துணை மின்நிலையம் தொடங்கிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் சிரமமின்றி ஊருக்கு பயணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார். மேலும் தேவையான இடங்களில் தனியார் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படவுள்ளன என்றும் தகவல் அளித்துள்ளார்.

வேளாங்கண்ணி – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில், காரைக்குடியில் மின்சார எஞ்சின், டீசல் எஞ்சின் ஆக மாற்றம் செய்யப்படுவதால், இரவு 11:05க்கு புறப்பட்ட ரயிலானது இனி செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11:50க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருத்துறைப்பூண்டி முதல் காரைக்குடி வரை உள்ள ரயில் பாதையானது மின் மயமாக்கப்பட்டதும் ரயில் வழக்கம்போல இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தீபக்(40), கேசவ்(33), நித்தின்(33) ஆகியோர் நேற்று ராமேஸ்வரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி 2 டூவீலர்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது புதுகை – கந்தர்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சையிலிருந்து மதுரை நோக்கி சென்ற வேன் டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கேசவ் புதுகை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

பழனி சின்ன கலையம்புத்தூரை சேர்ந்தவர் கார்த்திக்கேயன். இவரின் மனைவி பிரேமலதா. இருவரும் பழனியை சேர்ந்த பாலசுப்பிரமணியன், சரவணமுத்து, முத்துக்குமார், ரமனேஷ் ஆகிய 4 பேரிடம் மின்சாரம், பொதுப்பணி, கல்வித்துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 27 லட்ச ரூபாயை பெற்று கொண்டு மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து திண்டுக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு பிரேமலதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரி ஆட்சியர் தெரிவிக்கையில் பறவை காய்ச்சல் நோய்க்கு, சிகிச்சை அல்லது தடுப்பு மருந்து தற்போது இல்லை என்பதால், கேரளா மாநிலத்தில் இருந்து கோழிகள், முட்டைகள், கோழியின எச்சம் மற்றும் கோழி தீவனங்கள் வாகனங்களில் ஏற்றி வருவது, மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர், உடுமலை யூகேபி நகரை சேர்ந்த உத்தமராஜ் மகன் விக்னேஷ். இவர் நேற்று திருப்பூரில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்த நிலையில், அம்மாபட்டி பிரிவு அருகே கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பலியானார்.

சென்னை எழும்பூரில் இருந்து மயிலாடுதுறை வழியாக திருச்சிராப்பள்ளிக்கு இயக்கப்படும் தினசரி சோழன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் நாளை ஜனவரி 1ஆம் தேதி முதல் நேரம் மாற்றம் செய்யப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து 15 நிமிடம் தாமதமாக காலை 8 மணிக்கு புறப்படும் எனவும் திருச்சியில் இருந்து சென்னைக்கு 1 மணி நேரம் 10 நிமிடம் தாமதமாக மதியம் 12:10 மணிக்கு ரயில் புறப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

பெரம்பலூர் மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம்! 2025-ஆம் ஆண்டில் பெரம்பலூரில் வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்!
Sorry, no posts matched your criteria.