India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சந்தவேலூர் கிராமம், குண்டு மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜாமலாவலா ஆப்பிள்(48). இவரது மனைவி சங்கீதா, மகன் ஆதியுடன் பைக்கில் வாலாஜாபாத் சென்றுவிட்டு மீண்டும் சுங்குவார்சத்திரம் நோக்கு வந்துகொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி மோதியதில் ஜாமலாவாலா ஆப்பிள் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகனும், மனைவியும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருச்சி பீமநகர் கொச தெருவை சேர்ந்தவர் சைமன் கிஷோர் (23). இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி செம்மொழி ரயிலில் சென்று கொண்டிருந்த அஞ்சலி (31) என்ற பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, அவர் வைத்திருந்த கைப்பையை பறித்து சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சைமன் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (46). இவர் மணக்காட்டுவிளை பகுதியில் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 17 வயது சிறுவன் ஓட்டி வந்த டூவீலர் சுரேஷ் மீது மோதியது. இதில் சுரேஷ் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குளச்சல் G.H-ல் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் G.H-ல் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாஞ்சிக்கோட்டை சாலை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் நேற்று முன்தினம் தனது மனைவி சுப்பு லட்சுமியுடன் தஞ்சை-திருச்சி புறவழிச்சாலையில் சென்ற போது, அவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கார் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். பின்னர் தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து ஓட்டுனரை கைது செய்தனர்.

தொண்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அதில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரியும், பேரூராட்சியின் தலைவர் மகன் பேரூராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை தடுக்கக் கோரியும் தொண்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு த.மு.மு.க., உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்த ஏராாளமானோர் முற்றுகையிட்டனர். அனுமதி இல்லாமல் முற்றுகையிட்டதால் 100க்கும் மேற்பட்டவர்கள் மீது தொண்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.

முத்துப்பேட்டை தெற்கு தெரு அரபு சாஹீப் பள்ளிவாசல் தர்காவின் உண்டியலை யாரோ மர்ம நபர் உடைத்து திருட முயற்சி செய்து உண்டியலின் பூட்டை சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தர்கா கமிட்டி தலைவர் தக்பீர் நெய்னா முகமது முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தர்கா உண்டியலை உடைத்து திருட முயன்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தருமபுரி, கம்பைநல்லூர் அடுத்த எலவடை பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (52) கூலி தொழிலாளி. இவர் தனது இருசக்கர வாகனத்தில் நேற்று (ஜன.1) செல்லும் பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வாணாபுரதைச் சேர்ந்த மணிகண்டன் (28) மற்றும் 17 வயது சிறுமி காதலித்து வந்துள்ளனர். இதற்கு சிறுமியின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சிறுமி கர்ப்பமாகிய நிலையில், மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் கூறியதை கேட்டு, மணிகண்டன் மற்றும் குடும்பத்தினர் மீது சிறுமி புகார் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சற்று தமிழக கடலோரத்துக்கு நெருங்கி வந்துள்ளது. இதன், காரணமாக தமிழகத்தில் கோவை மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களுக்கு இன்று காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. (கோவை மாவட்டத்தில் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க, SHARE பண்ணுங்க)

கீழ்பென்னாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.3) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக கீழ்பென்னாத்தூர், கரிக்கலாம்பாடி, கணியாம்பூண்டி, ராயம்பேட்டை, சிறுநாத்தூர், மேக்களூர், நல்லான்பிள்ளைப்பெற்றாள், சோமாசிபாடி, கடம்பை, சோ.காட்டுகுளம், ஆராஞ்சி, காட்டுவேளானந்தல் & அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மிதடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.