India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சற்று தமிழக கடலோரத்துக்கு நெருங்கி வந்துள்ளது. இதன், காரணமாக தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களுக்கு இன்று(ஜன.2) காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. (மேலும், உங்க ஏரியால் மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க)

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதியான சின்னமுதலைபட்டி கடக்கால் வீதி தெருவில், வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த மணிகண்டன் என்பவரது 4 வயது மகன் ரோகித் வீட்டின் அருகே புதிதாக பாதாள சாக்கடைக்காக அமைத்த 5 அடி ஆழமுள்ள குழியில் நீரூற்று மூலம் தண்ணீர் நிரம்பியிருப்பதால் அந்த குழியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பணிக்கனூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார் (வயது தெரியவில்லை) நேற்று ஜலகண்டாபுரம் பகுதியில் தனது வீட்டில் மரணமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். காவல்துறையினர் தகவல் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரஞ்சித் குமார் கடந்த 10 ஆண்டுகளாக மனநிலை பாதிப்புடன் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரணாம்பட்டு அருகே உள்ள கீழ்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன், அஸ்வினி தம்பதி. இவர்களது 3 மாத குழந்தை யஸ்வந்த். நேற்று இவர்களின் குழந்தை இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அஸ்வினி மேல்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது பால் குடித்ததில் மூச்சுத் திணறி குழந்தை இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மேல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெருங்குடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முனீஸ்வரன்(25) நேற்று முன்தினம் இரவு 5 பேரால் வெட்டி கொல்லப்பட்டார். அவனியாபுரம் போலீசார் விசாரணை நடத்தியதில், பெருங்குடி திருமுருகன்( 32), வலையங்குளம் அருணாச்சலம்(32 ), சௌராஷ்டிர காலனி கார்த்திக்(28), சக்திவேல்(23) தண்யாயுதபாணி(27) ஆகிய 5 பேர் இக்கொலையை செய்தது தெரிந்தது. முன்விரோதம் காரணமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில், குணசேகர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, பழனிசாமி ஓட்டிய பேருந்து முன் அறிவிப்பு இன்றி திடீரென பிரேக் போட்டதில் பேருந்து பின்புறம் மோதிய குணசேகர் படுகாயம் அடைந்து, மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இச்சம்பவம் குறித்து தான்தோன்றி மலை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

பொன்னேரி அடுத்த தேவனாம்பட்டு அகரம் பகுதியைச் சேர்ந்த அருணா(27). கீரப்பாக்கம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். தாய் திட்டியதால் அவர் 2 தினங்களுக்கு முன்பு இரவு விஷம் அருந்தியுள்ளார். மயக்கிய அவரை, பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், நேற்று (ஜன.01) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கெங்கவல்லி அருகே, கூடமலை – கடம்பூர் சாலையில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இருப்பதைக்கண்டு அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து, கெங்கவல்லி போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றினர். உயிரிழந்த நபர் யார், மரணத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை!
Sorry, no posts matched your criteria.