Tamilnadu

News January 2, 2026

நம்பியூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: அதிரடி கைது

image

நம்பியூர் இரண்டாவது வடக்கு வீதி காந்திபுரம் மேடு பகுதியைச் சேர்ந்த குமரவேல் என்பவரது மகன் மரவேலை செய்யும் கூலி தொழிலாளி மருதாச்சலம் (40). இவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார், இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை நேற்று கோபி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News January 2, 2026

தூத்துக்குடி: பெற்றோர் திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை

image

உடன்குடி பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து (57). இவரது கடைசி மகன் சுந்தர் (25). கட்டிடத்தொழிலாளியான சுந்தருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் சுந்தர் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது அவரை தாய் சாவித்திரி கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையில் சுந்தர் தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குலசை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 2, 2026

கிருஷ்ணகிரி: ரூ.50 ஆயிரம் கடனால் பறிபோன உயிர்!

image

கொட்டாரப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி வேலுமணி (53). கடந்த 25ம் தேதி மண்ணாடிப்பட்டியை சேர்ந்த தமிழ்வாணன், தனபால் இருவரும் வேலுமணியிடம் கொடுத்த ரூ.50 ஆயிரம் கடனை திரும்ப கேட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட தகராறில் அவர்கள் வேலுமணியை தடியால் தாக்கி கழுத்தில் துண்டை போட்டு தெருவில் தரதரவென இழுத்துச்சென்றனர். இதனால் மனவேதனையடைந்து விஷம் குடித்த வேலுமணி, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

News January 2, 2026

கிருஷ்ணகிரியில் கரண்ட் கட்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம்ஜூஜூவாடி, பேகேபள்ளி, குருபரப்பள்ளி துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, தர்கா, சிப்காட், சூர்யா நகர், குருபரப்பள்ளி, விநாயகாபுரம், ஜீனூர், நல்லூர், தீர்த்தம், சானசந்திரம், தொரப்பள்ளி & அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2026

நாகை: ரூ.2.5 கோடிக்கு விற்பனை; புதிய உச்சம்!

image

பண்டிகை காலங்களில் வழக்கமாக டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் புத்தாண்டையொட்டி நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள மதுக்கடைகளில் நேற்று முன்தினம் மட்டும் ரூ.2 கோடியே 58 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.26 லட்சம் அதிகமாகும். கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி ஒரே நாளில் மொத்தம் ரூ.2.32 கோடி விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

News January 2, 2026

அரியலூர் மாவட்டத்தில் இங்கெல்லாம் மின் தடை

image

ஜெயங்கொண்டம், தா.பழுர், தழுதாழைமேடு ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.03) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பிச்சனூர், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், சிலால், இருகையூர், உதயநத்தம், சோழமாதேவி, வீரசோழபுரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2026

சென்னையில் கொடூரத்தின் உச்சம்!

image

சென்னை அண்ணா நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது மதிவாணன் (29) அங்கிருந்த 7 வயது சிறுமியை கடத்தி சென்று வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மதிவாணனை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 2, 2026

விழுப்புரம்: தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை பலி!

image

வந்தவாசியைச் சேர்ந்த முருகன் மகள் ஸ்ரீ ஹர்ஷா (5), திண்டிவனம் அருகேயுள்ள தனது அத்தை வீட்டிற்கு தாயுடன் வந்திருந்தார். அப்போது, விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது 10 அடி ஆழம் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். உடன் குடும்பத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 2, 2026

செங்கை: லாரி டயரில் சிக்கி துடிதுடித்து பலி!

image

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பகவதி(22), நேற்று முன் தினம் இரவு ஆங்கில புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக பைக்கில் கேளம்பாக்கம் – வண்டலூர் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, கண்டிகையை அடுத்த வெங்கம்பாக்கம் சந்திப்பு அருகே சென்ற போது முன்னால் சென்ற டிப்பர் லாரியை வேகமாக முந்த நினைத்த போது, லாரி சக்கரத்தில் தடுமாறி விழுந்து, இழுத்துச் செல்லப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News January 2, 2026

கடலூர்: தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

image

கடலுார் முதுநகர் அடுத்த குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ரத்னாம்பாள் (80). கணவர் இறந்து விட்ட நிலையில் தனியாக வசித்து வந்த இவர், விறகு அடுப்பில் சமையல் செய்யும்போது, அவரது சேலையில் எதிர்பாராதவிதமாக தீப்பற்றியதில் படுகாயமடைந்தார். இதில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!