India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த துளசிங்கம், நேற்று தனது மகன் நவீன்ஸ்ரீ-யை (11) மொபெட்டில் அமர வைத்துக் கொண்டு, நடுவனந்தலில் இருந்து – ஆகூா் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிா் திசையில் வந்த லாரி வழிவிடுவதற்காக துளசிங்கம் மொபெட் மீது மோதியதில் சிறுவன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சென்னை, M.G.R.நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜய் (27) கார் மெக்கானிக்காக உள்ளார். ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று இவரது தோழியுடன் கோயிலுக்கு மதுரவாயல் சர்வீஸ் சாலை வழியாக சென்ற போது, எதிரே வந்த மற்றொரு டூவீலரின் மீது மோதி, விபத்துக்குள்ளானது. இதில் விஜய் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தோழியும், எதிர்த் திசையில் வந்த இருவரும் காயமடைந்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.

காட்டுப்புத்தூரை அடுத்த சீத்தப்பட்டியை சேர்ந்தவர் பிச்சைமுத்து (80). விவ–சாயி. இவர் சம்பவத்தன்று மஞ்சமேடு கிராமத்தில் ஆடுகளுக்கு புல் அறுப்பதற்காக வெளியே சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை அங்குள்ள கொங்க ஓடை வாய்க்காலில் பிச்சைமுத்து மரமான முறையில் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலுார் அருகே உள்ள முல்லைப்பெரியாற்றில் நேற்று முன்தினம் புல் அறுக்க சென்ற சங்கர் அவரது மனைவி கணேஸ்வரி ஆகியோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். லோயர்கேம்ப் போலீசார், கம்பம் தீயணைப்புத் துறையினர் மாயமான இருவரையும் தேடினர். 2வது நாளாக நேற்று முன்தினம் (டிச.31) நடைபெற்ற தேடுதல் பணியில் கணேஸ்வரியின் உடல் மீட்கப்பட்டது. சங்கர் உடல் கிடைக்காததால் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை அண்ணாநகரை சேர்ந்த சக்திமுனி(30), தனியார் வங்கியில் மேலாளராக உள்ளார். இவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்து 50 நாட்கள் ஆகிறது. தாய்ப்பால் கொடுத்து தாய் குழந்தையை தூங்க வைத்த பின்னர், பார்த்த போது குழந்தை அசைவின்றி இருந்தது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

விளாத்திகுளத்தில் க.சென்றாயபுரம் கிராமத்தை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் அப்பனசாமி (37) சிலம்பம் கற்றுக் கொடுத்து வந்துள்ளார். அங்கு, 15 வயது சிறுமிக்கு இவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் அப்பனசாமியை (37) விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்த தம்பதி செந்தில் – சந்தியா (25). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளாகிறது. கணவன் – மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. டிச.31ம் தேதி இரவும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த சந்தியா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆனதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் தொடர்கிறது.

தென்காசி ஆலங்குளம் அருகே கழுநீர்குளத்தை சேர்ந்தவர் அருள்ராம நவநீதகிருஷ்ணன் (63). இவர் நேற்று சாலையை கடக்க முயன்ற பொழுது அப்பகுதியில் வேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீரக்கேரளம்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தில் மது போதையில் காரை ஓட்டி வந்ததாக நெல்லை டவுணை சேர்ந்த ஹரிஷ் மாதவன் (21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த பொறியாளர் வினோத்ராம் என்பவர் வீட்டில் கதவை உடைத்து 30 பவுன் தங்க நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற வழக்கில் பெங்களூர் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், திருவாரூரில் பதுங்கி இருந்த இந்த வழக்கில் தொடர்புடைய புதுச்சேரியைச் சேர்ந்த ரகுராமன் மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோரை நேற்று பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.

2026-ஆம் ஆண்டு திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது திருநங்கையர் தினமான வரும் ஏப்.15ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ளது. இதற்கு அரசு உதவி இல்லாமல் திருநங்கைகள் சுயமாக முன்னேறி இருப்பவர்கள் <
Sorry, no posts matched your criteria.