Tamilnadu

News January 2, 2026

மயிலாடுதுறை: ரூ.2.5 கோடிக்கு மது விற்பனை; புதிய உச்சம்!

image

பண்டிகை காலங்களில் வழக்கமாக டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் புத்தாண்டையொட்டி மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள மதுக்கடைகளில் நேற்று முன்தினம் மட்டும் ரூ.2 கோடியே 58 லட்சத்துக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.26 லட்சம் அதிகமாகும். கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி ஒரே நாளில் மொத்தம் ரூ.2.32 கோடி விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

News January 2, 2026

திண்டுக்கல்: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

image

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், ஜன.6-ம் தேதி கடைசி நாள் ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 2, 2026

கரூர்: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

image

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், ஜன.6-ம் தேதி கடைசி நாள் ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 2, 2026

திருப்பூர்: B.E, B.TECH, MBA போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

image

ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு B.E, B.TECH, MBA, ME முடித்த 21 முதல் 45 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.3 லட்சம் முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு <>இங்கு கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்கலாம். மேலும், ஜன.6-ம் தேதி கடைசி நாள் ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 2, 2026

ஆவடி புதிய காவல் ஆணையாளர் பதவியேற்பு!

image

ஆவடி காவல் ஆணையாளராக காவல்துறை கூடுதல் இயக்குனர்
பிரேம் ஆனந்த் சின்கா பொறுப்பேற்று, தமிழ்நாடு காவல்துறையின் தென் மண்டல காவல் துறை தலைவராக பணிபுரிந்து வந்த பிரேம் ஆனந்த் சின்கா, காவல்துறை கூடுதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்று, ஆவடி காவல் ஆணையரகத்தின் நான்காவது புதிய காவல் ஆணையாளராக நேற்று(ஜன.1) பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

News January 2, 2026

நீலகிரி மக்களே அவசியம் பாருங்க!

image

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் காலங்களில் தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் முழு புள்ளி விபரம், அவசர காலத்தின் போது தேவைக்கேற்ப நீச்சல் வீரர்கள், உயரம் ஏறுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சமூக அமைப்புகளின் தொடர்பு எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை அறிய இந்த ஒற்றை லிங்கை <>க்ளிக் <<>>செய்தால் போதும். யாருக்காவது கண்டிப்பாக உதவும் SHARE பண்ணுங்க!

News January 2, 2026

ராமநாதபுரம்: சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்

image

பெரியபட்டினம் தக்வா தெருவை சேர்ந்த 4 வயது சிறுவன் நேற்று முன்தினம் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாகச் சென்ற நாய் ஒன்று சிறுவனின் தாய் கண்ணெதிரே அவரை கடித்து குதறியது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நாயை விரட்டி விட்டனர். சிறுவனை நாய் கடித்துக் குதறுவது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி பரவியது. சிறுவன் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

News January 2, 2026

அரியலூர்: கடத்தல் திட்டம் போட்ட 5 பேர் கைது

image

கீழப்பழுவூர் காவல் துறையினர் வாரணவாசி மருதையாறு பாலம் அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது, கார் ஒன்றில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 5 பேரை பிடித்தனர். இதுகுறித்து போலீசார், அவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை கடத்தி, பணம் பறிக்க திட்டமிட்டு காரில் ஆயுதங்களுடன் சென்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார், அனைவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

News January 2, 2026

நாகை: குழந்தை இறந்த சோகத்தில் தாய் தற்கொலை

image

கீழையூா் அடுத்த அகரம் பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் (35)-ரம்யா (30) தம்பதி மகன் தேவா (3). ஐயப்பன் கடந்தாண்டு உயிரிழந்த நிலையில் ரம்யா மகனை வளா்த்து வந்தாா். இந்நிலையில், எதிா்பாராதவிதமாக வீட்டுவாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அருகிலுள்ள வாய்க்காலில் தவறி விழுந்து இறந்துபோனது. இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த ரம்யா புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News January 2, 2026

தி.மலை: பைக்கில் தடுமாறி விழுந்தவர் பலி!

image

செய்யாறு, உக்கல் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தீபன் (23) இவர் செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் டிச.21 ஆம் தேதி வேலைக்கு செல்ல பைக்கில் சென்ற போது, நிலைத் தடுமாறி கீழே விழுந்துள்ளார். சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தூசி போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!