India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே உங்க ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால் <

ஈரோடு மக்களே உங்க ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால் <

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடை பயணத்தை தொடங்கி வைப்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.2) திருச்சி வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு திருச்சி மாநகர பகுதிகளில் இன்று ஒரு நாள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

சின்னசேலம் வட்டாரத்துக்குட்பட்ட பகுதியில் கோமுகி அணை, ஏரி பாசனம், கிணற்றுப் பாசனம் மூலம் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தப் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். மேலும் தற்போது புது நெல்லை அறுவடை செய்து பொங்கல் வைப்பதற்கு பெரும்பாலான வயல்களில் தயார் நிலையில் நெல் விளைச்சல் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

செய்யாறு, வாழ்க்குடையை சேர்ந்தவர் விஷ்ணு (27) இவருக்கு திருமணமாகி மோனிஷா என்கிற மனைவியும் 3 மாத கைக்குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், இருவருக்குள்ளேயும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த பிரச்னையில், மோனிஷா தனது தந்தை வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த விஷ்ணு நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். செய்யாறு போலீசார் விசாரிக்கின்றனர்.

சின்னசேலம் கூகையூர்ரோடு அருகே ஆம்னி வாகனம் ஒன்று கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆம்னி வேன் யாருடையது? எதற்காக இங்கே நிற்கிறது? என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை. இந்த வாகனத்தை சின்னசேலம் போலீசார் பறிமுதல் செய்து, வாகனத்தின் உள்ளே என்ன இருக்கிறது என்று ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் அச்சத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் நிக்சன்(48). கார் டிரைவரான இவருக்கு கிருஷ்ண மாலா(39) என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் இருந்தனர். கடந்த 2023ஆம் தேனி மாவட்டம், கம்பம் பகுதிக்கு சுற்றுலா சென்றார். அப்போது, அவரது மகள் பேமினா(14) சுருளி அருவியில் விழுந்து உயிரிழந்தார். இதனால், மனமுடைந்த நிக்சன், நேற்று(ஜன.1) தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அறந்தாங்கி அருகே அலஞ்சிரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவமாலை(69). இவர் தனது வீட்டில் உள்ள மாட்டில் பால் கறக்க சென்ற போது, அங்கு பதிங்கிருந்த் மர்ம நபர் ஒருவர் அவரை தாக்கி 3 சவரன் தங்க சங்கிலையை பறித்து சென்றுள்ளார். பின்னர் மூதாட்டையை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தனிப்படை அமைத்து விசாராணை மேற்கொண்ட் காவல்துறை, பெரியாளூரை சேர்ந்த ரமேஷ் என்பவரை கைது செய்தனர்.

அரசு போக்குவரத்துக்கழக் கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் தசரதன் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுனர்கள் பணியின் போது செல்ஃபோன் பயன்படுத்துவதால் விபத்து ஏற்படுகிறது. எனவே ஓட்டுனர்கள் பணியின் போது, செல்ஃபோன், புளூடூத், ஹெட்செட் போன்ற சாதனங்களை பயன்ப்டுத்த கூடாது, இதனை மீறுவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி உதவியாளர் பணி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கு இலவச முழு மாதிரித்தேர்வுகள் வரும் 3, 10 மற்றும் 17-ந்தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.