Tamilnadu

News January 3, 2026

விழுப்புரம்: பெண்களிடம் குடிமகன் தகராறு!

image

செஞ்சி அருகே நேற்று ஒரு வீட்டு வாசலில், லோகேஷ் (23) போதையில் படுத்திருந்தார். அவரை அங்கிருந்து போகும் படி, அந்த வீட்டின் பெண்கள் கூறிய நிலையில், ஆத்திரமடைந்த அவர் கம்பியால் தன்னை குத்தி காயப்படுத்திக்கொண்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கிராம பெண்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள மதுபான கடையை முற்றுகையிட்டனர். பின்னர் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதும் கலைந்து சென்றனர்.

News January 3, 2026

தஞ்சை மாவட்டத்தில் 464 இடங்களில் தீவிபத்து!

image

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2025-ம் ஆண்டு தீப்பிடித்ததாக தஞ்சை, கும்பகோணம், திருக்காட்டுப் பள்ளி, பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு மொத்தம் 464 தகவல்கள் வந்தன. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அணைத்ததால் ரூ.3 கோடியே 17 லட்சத்து 60 ஆயிரத்து 400 மதிப்பிலான சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டன. ரூ.24 லட்சத்து 70 ஆயிரத்து 900 மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

News January 3, 2026

செங்கல்பட்டு: நாளை மின்சார ரயில் ரத்து!

image

சென்னை எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள செங்கல்பட்டு – சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையங்களில் நாளை(ஜன.4) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் , சென்னை கடற்கரையில் இருந்து நாளை காலை 11:45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் பகுதிநேரமாக சி.பெருமாள் கோவில் – செங்கை இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE!

News January 3, 2026

ராணிப்பேட்டை: இலவச மாதிரி தேர்வு குறித்து அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC GROUP தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு (03.01.2026) காலை 10 மணிக்கு இராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வு எழுதுவதற்கு விருப்பம் உள்ள போட்டித் தேர்வர்கள் புகைப்படம் 2, ஆதார் அட்டை நகல் உடன் தேர்வில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மதுரை: ஓடும் ரயிலில் கீழே விழுந்து முதியவர் பலி.!

image

மதுரை விளாங்குடி அருகே கரிசல்குளம் ரயில்வேகேட் அருகே, மயிலாடு­ து­றை­யிலிருந்து, செங்­கோட்டை செல்லும் பயணி­கள் ரயி­லில் இருந்து சுமார் 60 வயது மதிக்­கத்­தக்க அடையாளம் தெரியாத முதியவர் நேற்று முன்தினம் கீழே விழுந்தார். சிகிச்சைக்­காக அரசு மருத்­துவம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­வர் நேற்று (ஜன.2) சிகிச்சை பலனின்றி இறந்­து போனார். ரயில்வே போலீ­சார் விசாரணை செய்து வருகின்றனர்.

புதுச்சேரியில் 8,781 வழக்குகள் பதிவு

image

புதுச்சேரியில் 2025-ம் ஆண்டு காவல் நிலையங்களில் 8,781 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2024-ஐ விட 1,534 வழக்குகள் அதிகம் என புதுச்சேரி காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். ரெட்டியார் பாளையத்தில் 1,395 வழக்குகள், மேட்டுப்பாளையத்தில் 215, லாஸ்பேட்டையில் 282, கோரிமேட்டில் 261, சேதரப்பட்டில் 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என புதுச்சேரி காவல்துறை அறிவித்துள்ளனர்.

News January 3, 2026

பெரம்பலூர்: ஆட்சியர் பரிசு வழங்கி பாராட்டு

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நேற்று (ஜன.2) பொது சுகாதாரத்துறை சார்பில் நடைபெற்ற, மாதாந்திர திறனாய்வுக் கூட்டத்தில், உலக மக்கள் தொகை தினம் 11.07.2025 அன்று மாவட்ட குடும்ப நலச் செயலகத்தின் மூலம் நடைபெற்ற ஓவியப் போட்டியில், வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.

News January 3, 2026

மயிலாடுதுறை: மின்தடை தற்காலிகமாக ஒத்திவைப்பு

image

மயிலாடுதுறை வட்டம் மணக்குடி துணை மின் நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக இன்று சனிக்கிழமை மின்தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் மின்தடை செய்யப்படுவது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!