India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், இன்று மற்றும் நாளை (ஜன.3, 4) வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வாக்காளர்கள் கலந்து கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட சேவைகளை பெறலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரவணன் தெரிவித்துள்ளார்.

சேலம் மல்லூரைச் சேர்ந்த தனியார் நிறுவன உதவி மேலாளர் ஆனந்த் (25), நேற்று முன்தினம் ஏற்காட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார். சேர்வராயன் கோவில் வளைவில் அதிவேகமாகச் சென்றபோது நிலைதடுமாறி விபத்துக்குள்ளான அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் இன்றும் (ஜன.3), நாளையும்
(ஜன.4) அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான இறுதி வாய்ப்பு இதுவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, 18 வயது பூர்த்தி அடைந்தோர், தங்கள் பெயர் SIR லிஸ்டில் வராதோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும். SHARE

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம் (24). சிதம்பரத்தில் டிரைவராக வேலை செய்து வந்த இவர், 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி கர்பமாக்கியுளார். இதையடுத்து சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில், அவரது தாய் அளித்த புகாரின் பேரில் இப்ராகிமை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இப்ராகிமின் குற்ற செயலை கட்டுப்படுத்தும் வகையில், அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

மேடவாக்கத்தில் இருந்து செம்மொழி மெயின் சாலை வழியில் பகதூர் சிங்(39) என்பவர் ஓட்டி வந்த பைக் தண்ணீர் லாரி மோதியதில், லாரி சக்கரத்தில் சிக்கிய பகதூர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். அவர் பின்னால் லிப்ட் கேட்டு வந்த மதுரையைச் சேர்ந்த பாஸ்கர்(28) என்பவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, லாரி டிரைவர் இசக்கியை(24) போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியங்களுக்குட்பட்ட 274 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் தேசிய ஊரக வேலை உறுதி மற்றும் பிரதமர் நினைவு குடியிருப்பு திட்டங்களின் வரவு–செலவு கணக்குகளுக்கான 26வது சுற்று சமூக தணிக்கை இன்று(ஜன.03) நடைபெற உள்ளது. இதற்காக நரப்பாக்கம், விஷார், வல்லம் உள்ளிட்ட 16 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் 2025 கடந்த ஆண்டில் சாலை விபத்துகள் மூலம் மொத்தம் 410 போ் உயிரிழந்துள்ளனா். 2024-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 30 போ் அதிகம் என மாவட்ட நகர காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவித்துள்ளன. 2025-ல் சாலை போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக 1,76,664 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விதிமீறலில் ஈடுபட்டவா்களுக்கு ரூ. 5 கோடியே 23 லட்சத்து 69 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வேலூர் பழைய பைபாஸ் சாலையில் லாரிகள் பழுதுப் பார்க்கும் ஓர்க் ஷாப் உள்ளது. அங்கு, நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியில் நேற்று திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென லாரி முழுவதும் பரவி எரிந்தது. அதில் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்த நிலையில், விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம்: நெமிலியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது 2 வயது மகன் ருத்தீஷ்குமார், நேற்று வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது, அங்கு வந்த பள்ளி வேன் மாணவர்களை இறக்கி விட்டுவிட்டு, திரும்பியுள்ளது. அப்போது வேன் குழந்தை மீது மோதியதில், குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்த புகாரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்ட மக்களே இன்று (ஜன.3) பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், காலை 9 முதல் 2 மணிவரையிலும், சில இடங்களில் மாலை 5 மணி வரையிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி, செங்கோட்டை சங்கரன்கோவில், கடையம் சம்பவர் வடகரை , சுரண்டை, புளியங்குடி ஆலங்குளம் கீழப்பாவூர் ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE
Sorry, no posts matched your criteria.