India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நெல்லை மாவட்ட மக்களே இன்று (ஜன.3) பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், காலை 9 முதல் 2 மணிவரையிலும், சில இடங்களில் மாலை 5 மணி வரையிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொக்கிரகுளம் (ஜங்க்சன்), பணகுடி, வீரசிகாமணி, ஊத்துமலை, துப்பாக்கிப்பட்டி, வீரவநல்லூர், பெருமாள்பட்டி, அம்பை, மணிமுத்தாறு ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை. SHARE

கேரளா, போடி. குரங்கணி, கொட்டகுடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழை நேற்று காலை வரை நீடித்தது. இதனால் கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து அணைப்பிள்ளையார் அணையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அணை தடுப்பணையை கடந்து வெள்ளப் பெருக்காக நீர் அருவியாய் கொட்டி வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குளிக்க போலீசார் தடை விதித்து எச்சரித்துள்ளனர்.

விருதுநகர் அடுத்த சூலக்கரைமேடைச் சேர்ந்தவர் முருகன் 31. இவர் கட்டடங்களுக்கு சென்ட்ரிங் பலகை அடிக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று சூலக்கரையில் காலை 11:30 மணிக்கு ஒரு வீட்டில் சென்ட்ரிங் பலகை அடிக்கும் போது இணைப்பு மின் ஒயரில் சுத்தியல் பட்டு மின்சாரம் தாக்கி பலியானார். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

மாவட்ட அளவிலான விசாரணை நீதிமன்றங்களில் ஈ-பைலிங் முறையை ரத்துசெய்து, ஏற்கெனவே நடைமுறையிலிருந்த பிசிக்கல் பைலிங் முறையை அனுமதிக்க வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட வழக்குரைஞர்கள் 21வது நாளாக நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் இதில் மாவட்ட அளவிலான விசாரணை நீதிமன்றங்களில் போதுமான கட்டமைப்பு, இணையதள வசதிகள் இல்லாமல் உள்ளது. எனவே இம்முறையை நிறுத்த வேண்டும் என கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

நாகை மாவட்டத்தில் பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டை, ஆதார் கார்டு, புகைப்படம், கல்வி சான்று, பணிபுரியும் சான்று ஆகியவற்றுடன் மாற்றுத்திறனாளிகள் தங்களது அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாக இலவச பஸ் பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சூரியனூர் ஊராட்சி மேலப்பட்டியைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் பாலமுருகன் (33). சென்ட்ரிங் தொழிலாளியான இவர் தனது வீட்டின் அருகே தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்களை வைத்திருந்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற நங்கவரம் போலீசார் கஞ்சா வைத்திருந்த பாலமுருகன் மீது வழக்கு பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 560 கிராம் கஞ்சா பொருட்களை பறிமுதல் செய்தனர்

திண்டுக்கல்: சமூக வலைதளத்தில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பட்டாகத்தியுடன் 3 வாலிபர்கள் வீடியோ வெளியிட்டனர். இது குறித்து நிலக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார் மேற்பார்வையில் வத்தலகுண்டு காவல்நிலைய ஆய்வாளர் கௌதம் விசாரணை மேற்கொண்டு சம்பவத்தில் ஈடுபட்டு பழைய வத்தலகுண்டு சேர்ந்த சென்றாய பெருமாள், விஜயகுமார்;துரை அரசு ஆகிய3பேரைகைது செய்து பட்டகத்தியை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி: கிளியூரை சேர்ந்த கார்த்திகேயன் தினமும் குடித்துவிட்டு தனது மனைவி விஜயலட்சுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார். வழக்கம்போல், நேற்று முன்தினமும் தனது மனைவியை அடித்துள்ளார். அப்போது அவரது மாமியார் பாக்கியலட்சுமி தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், மாமியாரை கட்டையால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம்ஜூஜூவாடி, பேகேபள்ளி, குருபரப்பள்ளி துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, தர்கா, சிப்காட், சூர்யா நகர், குருபரப்பள்ளி, விநாயகாபுரம், ஜீனூர், நல்லூர், தீர்த்தம், சானசந்திரம், தொரப்பள்ளி & அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டியை சேர்ந்த 15 வயது பெண்ணை,சையது ஹக்கிம் என்பவர் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் உதகை போலீசார் போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்தனர்.நேற்று மகிளா கோர்ட்டில் குற்றம் உறுதிபடுத்தபட்டதை அடுத்து அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ₹10000 அபதாரம் விதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.