India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தருமபுரி மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று (ஜன.3) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது. தருமபுரி நான்கு ரோடு அருகில் உள்ள ரோட்டரி ஹாலில் நடைபெற உள்ள இம்முகாமில் கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண் சிவத்தல் போன்ற பிரச்சனைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்த பணிகள் தொடர்பாக, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடிகளில் தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, 03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.26 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. தகுதியுள்ள குடிமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட விண்ணப்பங்களை இம்முகாம்களில் சமர்ப்பிக்கலாம்

கருங்கல் அருகே திப்பிரமலை நெடுவிளையை சேர்ந்த தம்பதி ஜெறின் (41) – உஷா (32). இவர்களுக்கு ஒரு மகனும் (6), ஒரு மகளும் (5) உள்ளனர். சம்பவத்தன்று இரவு ஜெறின் அருகில் உள்ள ஆலயத்தில் பிரார்த்தனைக்கு சென்று, பின்னர் ஜெறின் திரும்ப வந்த போது மனைவியையும், 2 குழந்தைகளையும் காணவில்லை. மனைவியின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதுகுறித்து ஜெறின் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

முக்கூடல் அருகே தாளாளர்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரெனிஸ்குமார் (55). இவர் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் தோட்டத்தில் உள்ள அறையில் பல்பை பொருத்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அரக்கோணம் அடுத்த வளர்புரத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் செல்வகுமார் (11) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன் வீட்டின் அருகே உள்ள கால்வாயில் மீன் பிடித்து, அதனை சுடுவதற்காக கட்டைகளை அடுக்கி மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பை பற்ற வைத்த போது, தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் 137 கூட்டுறவு வங்கிகளில் 1,300 டன் யூரியா உரம், 439 டன் டி.ஏ.பி. மற்றும் 647 டன் காம்ப்ளக்ஸ் உரமும் கையிருப்பில் உள்ளது. மேலும் தனியார் கடைகளில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் உரங்களைப் பெற்று விவசாயப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் ஆருத்ரா தரிசனம் விழாவில் கோயில் வளாகத்திற்குள் பணிபுரிந்த உள்ளூர் போலீசார் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு முக்கியத்துவம் தந்தனர். இதனால் VVIP, பாஸ் வைத்திருந்தவர்கள் 3:00 மணி நேரம் வரை வெயிலில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டனர். எனவே வரும் ஆண்டுகளில் கோயில் உள்ளே வெளியூர் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தன

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜன.6-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ஓசூர், சூளகிரியை சேர்ந்தவர் தினேஷ் (19) தி.மலையில் ஒரு டீ கடையில் வேலை செய்து வருகிறார். காந்தி நகரில் வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், ஊத்தங்கரையை சேர்ந்த பெண்ணுக்கும் இவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட, நேற்று தினேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் இதுபற்றி விசாரிக்கின்றனர்.

நாராயணதேவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவா (29). இவருக்கு சற்று வாய் பேச முடியாத நிலை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக வீட்டில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மன உளைச்சல் அடைந்த சிவா நேற்று முன்தினம் பூச்சி மருந்தை குடித்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் (ஜன.1) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து இராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.
Sorry, no posts matched your criteria.