India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(45). இவர் தங்க நகை செய்யும் தொழில் செய்து வந்தார். சில ஆண்டுகளாக லேசான மன அழுத்தத்தில் இருந்தவர் அதற்கு சிகிச்சை பெற்றும் தூக்க மாத்திரை போட்டு வந்தார். சில நாட்களாக தூக்கம் வரவில்லை என இரவு முழுவதும் நடந்தபடி இருந்து வந்தார். இதனால் மன அழுத்தத்தில் நேற்று பாத்ரூம் கழுவும் ஆசிட் குடித்து உயிரிழந்தார். இது குறித்து S.S காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.

திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு நேற்று வீரையா என்பவர் ஓட்டி சென்ற பைக்கில் பின்னால் அமர்ந்து சுப்பிரமணியன் (38) சென்றுள்ளார். அப்போது அன்னவாசல் பேயல் குளத்தினருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து தலையில் படுகாயமடைந்து சுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி பாண்டி மீனா (30) அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த அன்னவாசல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாடனேந்தலைச் சேர்ந்த இந்திராகாந்தி (49) என்பவருக்கு, கலுங்குப்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி (52) மற்றும் அவரது மனைவி போதமுத்து (45) ஆகியோர் பழக்கமானவர்கள். இந்திராகாந்தியின் மகனுக்கு எஸ்.ஐ வேலை வாங்கித் தருவதாக அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இதற்காக பல்வேறு தவணைகளில் ரூ.10 லட்சம் பெற்றுள்ளனர். இது குறித்து திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்

சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் நிஜேஷ் (42). இவர் தொழில் செய்வதற்காக கடன் வாங்கியதில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த அவர் நேற்றிரவு தனது உறவினருக்கு வாய்ஸ் SMS அனுப்பி விட்டு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே தெற்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் கஞ்சா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கதிர்வேல், கோகுலகண்ணன், ஹரிகுமார் மற்றும் பெண் உட்பட 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளால் நாளை(ஜன.6) சங்கராபுரம், பாண்டலம், வட சிறுவள்ளூர், வடசெடீயந்தல், திம்மனந்தல், கிடங்குடையாம்பட்டு, ஆரூர், ராமராஜபுரம், பூட்டை, செம்பராம்பட்டு, அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சபுத்தூர், பொய்யாக்குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், எஸ்.குளத்தூர், மேலேரி, கீழப்பட்டு, தும்பை, கூடலூர் பகுதிகளில் காலை 9 – 2 மணி வரை மின் தடை. <

புதுப்பட்டு, ரங்கப்பனூர், மூலக்காடு, கொடியனூர், பவுஞ்சிப்பட்டு, ஆணைமடுவு, லக்கிநாயக்கன்பட்டி, சேராப்பட்டு, இன்னாடு, புத்திராம்பட்டு, மல்லாபுரம், பாவளம், ராவுத்தநல்லூர், பிரம்மகுண்டம், புளியங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 – மதியம் 2 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் நாளை (ஜன.06) காலை 9-5 மணி வரை வேலகவுண்டம்பட்டி, இளநகர், இலுப்புலி, தொண்டிப்பட்டி, செக்குப்பட்டி, பாளையம், எளையாம்பாளையம், ஜேடர்பாளையம், மானத்தி, திருச்செங்கோடு நகராட்சி,சிறுமொளசி, கருவேப்பம்பட்டி, ஆண்டிபாளையம், அலங்காநத்தம், ஆத்துாராம் பாளையம், தோக்கவாடி, அம்மாபாளையம்,எருமப்பட்டி, வரகூர்,பொட்டிரெட்டிப்பட்டி, பவித்திரம்,செல்லிபாளையம்,தேவராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

சேலத்தில் நாளை (ஜன.06) காலை 9-5 மணி வரை மாமாஞ்சி, குன்னுார், ஈச்சங்காடு, அடியனுார், தொட்டித்துறை, கருமந்துறை பாப்பநாயக்கன்பட்டி, மணியார்பாளையம், தும்பல், இடையப்பட்டி, சூலாங்குறிச்சி, குமாரபாளையம், கரியகோவில், கல்யாணகிரி, மன்னுார், கூடமலை, விஜயபுரம், கணவாய்காடு, நரிப்பாடி, 74.கிருஷ்ணாபுரம், நினங்கரை, மண்மலை,தலைவாசல், நத்தக்கரை, பாளையம், ஆறகளூர், சித்தேரி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

திண்டுக்கல், குட்டியப்பட்டியில் உலக அளவிலான சேவல் கண்காட்சி நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேவல் வளர்ப்பாளர்கள் கலந்து சேவல்களை காட்சிப்படுத்தினர். இதில், சிறந்த சேவல்களுக்கு எல்.இ.டி., டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்சி, கிரைண்டர் என 100 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
Sorry, no posts matched your criteria.