Tamilnadu

News January 5, 2026

பரமக்குடியில் அதிர்ச்சி… 145 கிலோ போலீசார் பறிமுதல்

image

பரமக்குடி டவுன் போலீசார் மதுரை -ராமேஸ்வரம் ரோடு பகுதியில் வாகன ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் சென்ற முசாபர் கனி தெரு, உதயகுமார் 48, பாசி பவளக்கார தெருவை சேர்ந்த கண்ணன் 57, ஆகியோரிடம் விசாரித்தனர். அவர்களிடமிருந்து 145.750 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்

News January 5, 2026

வேலூர்: நண்பனால் தடுக்கப்பட்ட பெரும் சம்பவம்!

image

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த உமாபதி, மணிவண்ணன் ஆகியோர் நேற்று முன்தினம் (ஜன.3) திருவண்ணாமலை மாவட்டம் கங்கிரானந்தல் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றுள்ளனர். அப்போது பாலாஜியின் நண்பர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த பாலாஜி, திருடர்களை கையும் களமுமாக பிடித்து சந்தவாசல் போலீசில் ஒப்படைத்தார். இதுக்குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 5, 2026

தி.மலை: நண்பனால் தடுக்கப்பட்ட பெரும் சம்பவம்!

image

தி.மலை: கண்ணமங்கலம் அருகே, கங்கிரானந்தல் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இருவரை, உரிமையாளர் கையும் களவுமாகப் பிடித்தார்.நண்பர் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த பாலாஜி, அவர்களைச் சந்தவாசல் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர்கள் வேலூரைச் சேர்ந்த உமாபதி மற்றும் மணிவண்ணன் எனத் தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 5, 2026

விழுப்புரம்: உடைந்து கிடந்த கதவு – காத்திருந்த பேரதிர்ச்சி!

image

விழுப்புரம் சாலமேடு பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் வெங்கடேசன், குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தபோது அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் 280 கிராம் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.2.75 லட்சமாகும். இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை செய்த் வருகின்றனர்.

News January 5, 2026

விருதுநகர்: ஒடும் பேருந்தில் நூதன திருட்டு

image

மதுரை, பேரையூரை சேர்ந்த சந்திரா 42. தனது 1 வயது பேத்தி உடன் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு. மீண்டும் மதுரை திரும்ப பழைய பஸ் ஸ்டாண்டில் பஸ் ஏறிய போது, பேத்தி கழுத்தில் இருந்த 2 கிராம் எடை உள்ள தங்க தாயத்துடன் கயிரை யாரோ இழுத்தது போல் தெரிந்தது. பஸ்சில் இருந்து இறங்கி சத்தம் போடவே அங்கு பணியில் இருந்த போலீசார் திருட முயன்ற மதுரை கூடல் நகர கண்ணனை் 63, கைது செய்தனர்.

News January 5, 2026

புதுச்சேரியில் மாணவர் ஆர்ப்பாட்டம்

image

வெனிசுலா நாட்டின் வளங்களை திருடும் நோக்கில், போர் வெறி பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டிப்பதாகவும், கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும், வெனிசுலா மீதான ஆக்கிரமிப்பை நிறுத்த கோரியும் புதுச்சேரியில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News January 5, 2026

திருவாரூர்: காா் மோதி பெண் பலி-ஒருவர் கைது

image

பரவாக்கோட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவரது மனைவி கயல்விழி. இவர், நேற்று அதே பகுதியில் சாலையோரம் நடந்து சென்றபோது அவ்வழியே மன்னாா்குடி பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த பீட்டர் என்பவர் அதிவேகமாக ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, கயல்விழி மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரவாக்கோட்டை போலீசார் பீட்டரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 5, 2026

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாட மாநில அரசு ரேஷன் கார்டு தாரர்களுக்கு,பொங்கல் தொகுப்பு வழங்குகிறது. ஊட்டி வட்டத்தில் 56,232, குன்னுார் வட்டத்தில் 45,506, கூடலுார் வட்டத்தில்,41,491;கோத்தகிரி வட்டத்தில், 29,384; குந்தா வட்டத்தில், 15,419 பந்தலுார் வட்டத்தில் 30,544 என,மொத்தம் 218,576 ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கபட உள்ளதாக கலெக்டர் கூறியுள்ளார்

News January 5, 2026

தஞ்சை: கோயில் வாசலில் கிடந்த சடலம்

image

தஞ்சாவூர் மாவட்டம், மாறனேரி திரௌபதி அம்மன் கோயில் வாசலில் இறந்த நிலையில் கிடந்த முதியவரின் சடலத்தை பூதலூர் போலீசார் மீட்டனர். கிராம நிர்வாக அலுவலரின் புகாரைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜெயராமன் என அடையாளம் காணப்பட்டது. இதுகுறித்து பூதலூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 5, 2026

ராணிப்பேட்டையில் படுஜோர் விற்பனை; தட்டி தூக்கிய போலீஸ்

image

ராணிப்பேட்டையில் நேற்று (ஜன.4) எஸ்.பி அய்மான் ஜமால் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அம்மூர் அருகே கைவிடப்பட்ட கட்டிடத்தில் மர்ம நபர்கள் சுற்றி திரிவது தெரியவந்தது. சோதனையில் போதை மாத்திரை விற்ற 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மாத்திரைகளை மும்பை மருந்தகத்திலிருந்து ஆர்டர் செய்ததும், 153 மாத்திரைகள் விற்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

error: Content is protected !!