India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

செங்கல்பட்டு அருகே நடந்த இரு வேறு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர். திருக்கழுக்குன்றம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற கூலித்தொழிலாளி பழனி (58), அரசு பேருந்து மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு விபத்தில், ஒரகடம் சாலையில் சென்ற இளைஞர் உதயா (21), தெள்ளிமேடு அருகே சாலைத் தடுப்பில் மோதி உயிரிழந்தார். இச்சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் கொப்பம்பட்டி, டி.முருங்கப்பட்டி, பாலகிருஷ்ணம்பட்டி, தங்கநகர், டி.ரெங்கநாதபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று மின் தடை செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக நாகநல்லூர், உப்பிலியபுரம், கோட்டைப்பாளையம், சும்புதூர், பாலக்காடு, செல்லிபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தழுதாழை பகுதியை சேர்ந்த செழியன் (7) என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன், அரையாண்டு விடுமுறை என்பதால் பெற்றோருடன் வயலுக்கு சென்றுள்ளார். அப்போது, கிணற்றின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து செழியன் உயிரிழந்தார். இதுகுறித்து அரும்பாவூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிஞ்சிப்பாடி அடுத்த அயன் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த 18-வது வார்டு கவுன்சிலரான ராஜ்குமாருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிவாவுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக நேற்று சிவா மனைவி வானஸ்டி, ராஜ்குமாரை திட்டியதால் மனமுடைந்த ராஜ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரியலூா் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி.,
1. நாகா்கோவில்-தாம்பரம் ரயில்: ஜன.12, 19 அதிகாலை 5.39 மணி
2. தாம்பரம்-கன்னியாகுமரி ரயில்: ஜன.12, 19 இரவு 7 மணி
3. திருநெல்வேலி-செங்கல்பட்டு அதிவிரைவு ரயில்: ஜன.9, 10, 16, 17 அதிகாலை 3.45 மணி
4. ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில்: ஜன.13 அதிகாலை 4.03
இதே ரயில்கள் மறுமார்க்கமாக செயல்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE

மணல்மேடு பாக்கம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி (42) எலக்ட்ரீசியனான இவருக்கும் இவரது மனைவி ரஞ்சிதாவிற்கும் ஏற்பட்ட குடும்ப தகராறில் அவர் ரஞ்சிதாவை தாக்க முற்பட்ட போது ரஞ்சிதா தடுக்க முயன்றார். அப்போது தடுமாறி ராஜீவ்காந்தி சுவரில் மோதி கீழே விழுந்தார். இதையடுத்து ரஞ்சிதா மறுநாள் காலையில் பார்த்தபோது அவர் உயிரிழந்திருந்தார். தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி ரஞ்சிதாவை கைது செய்தனர்

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் வேல்விழி (63). இவருக்கு சில மாதங்களாக நுரையீரல் பிரச்சனை இருந்து வந்த நிலையில் அதற்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இருந்த போதிலும் சரியாகாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்த அவர் அதிகளவில் மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

களக்காடு காமநேரியைச் சேர்ந்த லாரி டிரைவர் யேசுராஜா(34), மனைவி ஜெனிட்டா பிரசவத்துக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைக் கவனிக்க தங்கியிருந்த யேசுராஜா, தனது பைக்கை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்தார். இதனை இரவில் மர்மநபர்கள் பைக்கைத் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து யேசுராஜா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.