Tamilnadu

News January 5, 2026

தி.மலை அருகே நொடி பொழுதில் விபத்து – பறிபோன உயிர்!

image

வந்தவாசி அடுத்த தேசூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மற்றும் சீனிவாசன். இருவரும் தனியார் பஸ் டிரைவரைகள். இவர்கள் வேலை விஷயமாக செய்யாருக்கு மோட்டார்சைக்களில் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினர். மலையூர் கிராமம் அருகே வந்தபோது மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். மருத்துமனையில் அனுமதித்த போது சீனிவாசன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

News January 5, 2026

ராணிப்பேட்டையில் ரெய்டு!

image

ராணிப்பேட்டை மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநா் அறையில் ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் திடீா் சோதனை மேற்கொண்டனா். கணக்கில் வராத ரூ.25,850 ரொக்கம், 3 கிராம் தங்க நாணயங்கள், 50 டைரி, 15 சா்ட், பேண்ட் துணிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2026 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு பலரிடம் பரிசு பொருள்களை பெறுவதாக வந்த தகவலின் பேரில் இந்த ரெய்டு நடந்துள்ளது.

News January 5, 2026

குமரி: டாஸ்மாக் விற்பனை ரூ.11 கோடியே 63 லட்சமாம்!

image

குமரி மாவட்டத்தில் 97 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. புத்தாண்டையொட்டி குமரி மாவட்டத்தில் மது விற்பனை அதிகரித்தது. டிசம்பர் 31.ம் தேதி ரூ.4,32,94,260, ஜனவரி 1.ம் தேதி ரூ4,08,2640, ஜனவரி3.ம் தேதி ரூ.3,22,16,650 என மொத்தம்  ரூ11 கோடியே 63 லட்சத்து 13 ஆயிரத்து 550க்கு மதுபானங்கள் குமரியில் விற்பனையாகி உள்ளது. பீர் வகைகளை விட மதுபான வகைகளே அதிகம் விற்பனையானது எனவும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News January 5, 2026

உத்தரகோசமங்கை கோவிலில் விபூதி வழங்க போலீஸ் தடை

image

ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் சந்தனம் படி களையப்பட்ட அபூர்வ பச்சை மரகத நடராஜரை தரிசனம் செய்வதற்காக, பல ஆயிரம் பக்தர்கள் நீண்ட வரிசையில், பல சிரமங்களையும் பொருட்படுத்தாமல் நின்று தரிசனம் செய்தனர். இந்நிலையில், எந்த ஆண்டும் இல்லாமல் புதிய நடைமுறையாக, நேற்று காலை முதல் புதிய சந்தனம் காப்பிடப்பட்ட மரகத நடராஜரை தரிசனம் செய்த பக்தர்களுக்கு, விபூதி பிரசாதம் வழங்க போலீசார் தடை விதித்தனர்.

News January 5, 2026

சங்கரன்கோவிலில் சிறுமி தூக்குபோட்டு தற்கொலை

image

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த காருண்ய கண்ணன் என்பவரின் மகள் காவியா ஸ்ரீ (13). மனைவி இறந்துவிட்டதால் அவர் வேறு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். காவியாஸ்ரீ தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளியில் 8வது படித்து வந்தார். இந்நிலையில் காவ்யா ஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டில் பாட்டி இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சங்கரன்கோயில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 5, 2026

வேலூர்: +1 மாணவிக்கு சுத்தி சுத்தி LOVE டார்ச்சர்!

image

வேலூர் நகரை சேர்ந்த +1 படிக்கும் சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த சக்தியும் (23) காதலித்து வந்தனர். மகளின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சிறுமி சக்தியிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால் மாணவி பள்ளிக்கு செல்லும் பொது சக்தி தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் சக்தியை போலீசார் நேற்று முன்தினம் (ஜன.3) கைது செய்தனர்.

News January 5, 2026

கிருஷ்ணகிரி: பைக்குகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

image

தேன்கனிக்கோட்டை அருகே கச்சுவாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (27). இவர் பாலத்தொட்டனப்பள்ளி கிராமத்தில் இருந்து தேன்கனிக்கோட்டை நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். இதேபோல் காசிநாயக்கன் தொட்டி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சந்திரன் (40) எதிரே மொபட்டில் வந்தார். ஒசட்டி அருகே ஸ்கூட்டரும், மொபட்டும் நேருக்கு நேர் மோதி கோரா விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

News January 5, 2026

திருப்பூரைச் சேர்ந்தவர் விபத்தில் பலி

image

திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில், தாடிக்கொம்பு அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் திருப்பூர் சேர்ந்த சேகர் (55) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் பாண்டித்துரை படுகாயமடைந்து திண்டுக்கல் GH-ல் சிகிச்சை உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 5, 2026

நாமக்கல் அருகே இளம்பெண் சடலமாக மீட்பு

image

பாப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் தீபா, 37; விவசாயி. இவரது மகள் சர்மிளா, 18. திருச்சி தனியார் கல்லுாரியில், 1ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை அருகில் இருக்கும் அத்தை வீட்டுக்கு செல்வதாக கூறிச் சென்றார். இந்நிலையில், அப்பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் சர்மிளா சடலமாக மீட்கப்பட்டார். வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News January 5, 2026

திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் எச்சரிக்கை செய்தி

image

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கோவில் வளாகத்திற்குள் வந்தால் மட்டுமே பன்னீர் இலை, விபூதி பிரசாதம் உள்ளிட்ட பல்வேறு பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் முருகன் கோயில் பெயரில் போலி சமூக தளத்தில் சிலர் கோவில் பிரசாதத்தை தங்களுக்கு கொரியரில் அனுப்பி வைப்பதாக கூறி பொய் தகவல்களை பரப்பி வருகின்றனர். எனவே, இவற்றை யாரும் நம்ப வேண்டாம் என கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!