India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னையிலிருந்து கரூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, உளுந்தூர்பேட்டை பாதூர் அருகே நேற்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்து தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் நாமக்கல்லைச் சேர்ந்த ஜியாவுதீன் (25) உயிரிழந்தார்; 5 பேர் காயமடைந்தனர். இதனால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சென்னை கொரட்டூர் சேர்ந்தவர் சிவராமன். இவர் தனது குடும்பத்துடன் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வைதீஸ்வரன் கோவிலுக்கு சென்றுவிட்டு உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக காரில் கும்பகோணம் நன்னிலம் நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது முன் சக்கரம் வெடித்தில் முன்னாள் சென்ற பேருந்து மீது கார் மோதியதில் இதில் பேருந்தில் பின் பக்க சக்கரமும் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏதுமில்லை.

செங்கல்பட்டு அடுத்த பழமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாவேந்திரன் (25) என்பவர், வாடகை கார் ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆலப்பாக்கம் அருகே கார் பழுதாகி நின்ற நிலையில், மீண்டும் இயக்க முயன்றபோது திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் கார் முழுவதுமாக எரிந்து எலும்புக்கூடாகியது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் இன்று (ஜன.05) திங்கள்கிழமை பல்வேறு இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ராசிங்காபுரம், சிலமலை, டி. ரங்கநாதபுரம், சங்கராபுரம், நாகலாபுரம், சூலப்புரம், பொட்டிப்புரம், சில்லமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அதற்கேற்ப பணிகளை மாற்றியமைத்து கொள்ளுங்கள் SHARE IT..

மதுரை அன்பு நகரை சேர்ந்த அந்தோணி மகன் பிரசாந்த் (25) என்பவர் கஞ்சா வழக்கில் தண்டனை பெற்று மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நிர்வாக காரணங்களுக்காக, கடலூர் மத்திய சிறைக்கு ஏப்ரல் 4ம் தேதி மாற்றப்பட்டார். இந்நிலையில், நேற்று (ஜன.4) மாலை அறையில் அவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று அப்பகுதியில் நடந்து சென்ற 3 பெண்கள், 4 ஆண்கள் மற்றும் 2 வயது குழந்தை என 8 பேரையும் கடித்துள்ளது. இதில் காயமடைந்தவர்கள் அருகில் இருந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், தெரு நாய்களை கட்டுபடுத்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்களின் நலன் கருதி திருச்சி போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் செல்போன் பயன்படுத்திக் கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம் எனவும், விலைமதிப்பற்ற உயிரை பணயம் வைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது. மேலும் சாலை விதிகளை மீறுவோர் குறித்து புகார் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100 அழைக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.