India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சூளகிரி ஒன்றியம் பெத்தசிகரலப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஆலுசோனை கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ்(24). என்பவர் அவருடைய சித்தி சந்திரம்மாவை(50) நேற்று இரவு மருத்துவமனைக்கு அழைத்து சென்று வரும்பொழுது பெத்தசிகரலப்பள்ளி பேருந்து நிலையம் அருகில் டிராக்டர் மீது பைக் மோதிசம்பவ இடத்தில் முனிராஜ்(24) என்பவர் உயிரிழந்தார். சந்திரம்மா படுகாயத்துடன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் தனது பைக்கில் கடந்த 1-ம் தேதி தென்னிலை கோட்டாந்தூர் சாலையில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு கரூர் GH-ல் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் வீரமணி மனைவி உமா (40). இவரது கொழுந்தன் மகள் திருமண அழைப்பிதழில் தனக்கு பிடிக்காதவர்களின் பெயர் உள்ளதால், யாரும் திருமண நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது என வீரமணியுடன் உமா தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (ஜன.4) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமல் ஓட்டி வந்த 428 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் தலைக்கவசம் கொண்டு வந்து காண்பித்த 392 வாகனங்கள் விடுவிக்கப்பட்டது. மேலும் ஓட்டுனர்களை போலீசார் “இனி தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டமாட்டேன்” என உறுதிமொழி எடுக்க வைத்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தேவராஜ பாளையத்தைச் சேர்ந்தவர் சின்னா கவுண்டர், மலேசியாவில் வசித்து வந்தார். இவருக்கு சொந்தமான ஊரில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. சின்னா கவுண்டர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சின்னா கவுண்டர் எனும் மற்றொரு நபர் அந்த நிலத்திற்கு தனது பெயரை வைத்து போலிப் பத்திரத்தை தயாரித்து உறவினருக்கு விற்க முயன்றார். இதுகுறித்த புகாரில் இருவர் கைதானனர்.

தஞ்சை மாவட்டத்திலேயே கும்பகோணம் மீன் மார்க்கெட் முக்கிய இடம் வகிக்கிறது. இங்கு சாதாரண நாட்களில் 5 டன் மீன்களும், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் 20 டன் வரை மீன்களும் விற்பது வழக்கம். இந்நிலையில், தமிழகம் மற்றும் கேரள கடலோரப் பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் 15 டன் கடல் மீன்கள் கொண்டுவரப்பட்டு ஒரே நாளில் வேகமாக விற்பனை செய்யப்பட்டது.

தேனி மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <

போரூர், அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சில்பா எனும் திருநங்கை. இவர், வானகரம் சர்வீஸ் சாலை அருகே உள்ள குடோனில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். விசாரணையில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த துர்ஜான்(22) என்பவர் சில்பாவுடன் குடோனில் உல்லாசமாக இருந்ததும், தொடர்ந்து சட்டைப் பையில் இருந்த பணத்தை சில்பா பறித்ததால், அவர் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இதில் துர்ஜான் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <

நெல்லை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <
Sorry, no posts matched your criteria.