India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <

பொழிச்சலூர் மற்றும் பல்லாவரம் பகுதிகளில் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த 6பேரை சங்கர் நகர் போலீசார் கைது செய்தனர்.தடாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பல்லாவரம், திரிசூலம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்றது உறுதியானது. கைதான கிஷோர், அசோக்குமார் உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A – 26 – மார்ச் 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

மண்ணச்சநல்லூரை சேர்ந்த வணிகர்கள் நல சங்க தலைவர் ராஜேந்திரன் (65) என்பவரை மர்ம நபர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து விசாரணையில், தொழில் போட்டி காராணமாக கூலிப்படையை வைத்து, கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவத்திற்கு காரணமான வெங்கடேஷ் மற்றும் அவரது சகோதரி சிவகாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மக்களே 123PAY UPI மூலம் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். 8045163666 என்ற நம்பருக்கு கால் பண்ணுங்க. சேவையை தேர்வு செய்து, யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ, அவர்களின் போன் நம்பர் & எவ்வளவு பணம் என்பதையும் உள்ளிடவும். இதனை தொடர்ந்து UPI பரிவர்த்தனை செய்வதற்கான Confirmation call வரும். தகவல்களை சரிபார்த்து, UPI PIN எண்ணை கொடுத்தால், பணம் அனுப்பப்பட்டு விடும். யாருக்காவது பயன்படும் SHARE பண்ணுங்க.

மதுரை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாசன ஏரிகளில் 5 ஆண்டுகளுக்கு மீன்பாசி குத்தகை வழங்க இ-டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. www.tntenders.gov.in இணையதளத்தில் விவரங்கள் பெறலாம். ஒப்பந்தப் புள்ளி சமர்ப்பிக்கும் கடைசி நேரம் 05.01.2026 காலை 9 மணி. மேலும் விவரங்களுக்கு inlandfisheries15@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.

மேட்டுப்பாளையம் காந்தி மைதானத்தில் நூற்றுக்கணக்கான உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு லோடினை இறக்க, ஏற்ற வரும் லாரிகள் நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

திண்டுக்கல்லில் இன்று(ஜன.5) மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால் பிள்ளையார்நத்தம், என்.பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, போக்குவரத்துநகர், ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, தோமையார்புரம், மில்ஸ்காலனி, குட்டியபட்டி பிரிவு, அனுமந்தராயன்கோட்டை, கொடைரோடு, அம்மையநாயக்கனூர், குல்லலக்குண்டு, கந்தப்பக்கோட்டை பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (05.01.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: உடுமலை பகுதியில் தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், எஸ்.நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம், தீபாலபட்டி ஆகிய பகுதிகள் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. (SHARE)
Sorry, no posts matched your criteria.