Tamilnadu

News January 6, 2026

வேலூர்: போலீசுக்கு டிமிக்கி கொடுத்த பெண்ணால் பரபரப்பு

image

கே.வி.குப்பம், மேல்மாயில் பகுதியில் ரேவதி (35) என்பவர் கணவரை இழந்து ஆதரவின்றி சுற்றி திரிந்தார். உண்ண உணவு கூட இல்லாத நிலையில் இருந்த அவரை அப்பகுதி போலீசார் மீட்டு காட்பாடியில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு செய்தனர். ஆனால் வலி அனுப்ப வந்த போலீசாரை ஏமாற்றி ரேவதி தப்பி ஓடினார். ரேவதியை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

News January 6, 2026

செங்கை: வீட்டில் கேஸ் வெடித்து குழந்தை பலி!

image

காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாரதி, நேற்று முன்தினம் பால் காய்ச்ச அடுப்பை பற்றவைத்தபோது வீடு முழுவதும் தீப்பற்றியது. இதில் அவரும், தூங்கிக்கொண்டிருந்த அவரது மகன் திருக்குமரனும் பலத்த காயமடைந்தனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் திருக்குமரன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். தந்தை பாரதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News January 6, 2026

தருமபுரியில் விஷம் குடித்து தற்கொலை!

image

மொரப்பூர் அருகே உள்ள கந்தகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மாது(55). விவசாயியான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வந்தார். இந்நிலையில், கடந்த டிச.28ஆம் தேதி வலி தாங்க முடியாமல் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், பலனின்றி நேற்று(ஜன.5) உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 6, 2026

நாகை அருகே முதியவர் அடித்துக் கொலை

image

கீழ்வேளூர் அருகே ஆதமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர் ரவி (60). விவசாய கூலித்தொழிலாளியான இவருக்கும் கீரங்குடியை சேர்ந்த சிவபாலன் (29), பிரகாஷ் (28) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் நிலவியுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று முதியவருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞர்கள் அவரை தலையில் பலமாக தாக்கியதில், ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வலிவலம் போலீசார் இளைஞர்கள் இருவரையும் கைது செய்தனர்.

News January 6, 2026

கள்ளக்குறிச்சியில் தூக்கிட்டு தற்கொலை!

image

கெடார் அடுத்த வெங்கத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு(61). இவரது மகன் பாஸ்கரனுக்கும்(31) ஹரிணி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பாஸ்கரனை விட்டு ஹரிணி பிரிந்து சென்று, 2 ஆண்டுகளாக விருத்தாச்சலத்தில் வாழ்ந்து வருகிறார். இதனால் மனமுடைந்த தந்தை ராஜாக்கண்ணு, நேற்று முன் தினம் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

News January 6, 2026

தேனி: கார்-பைக் மோதல்; டிரைவர் பலி..

image

போடி, கன்னிசேர்வைபட்டியை சேர்ந்தவர் சுரேஷ். தனியார் பஸ் டிரைவர். இவர் நாகலாபுரம் விலக்கு பகுதியில் தனது பைக்கில் சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது எதிரே வந்த கார் இவரது பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுரேஷ்-யை சிகிச்சைக்காக GH-ல் சேர்த்தனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News January 6, 2026

தி.மலை: சிறுமியை காட்டிற்குள் அழைத்து சென்று கொடூரம்

image

தண்டராம்பட்டு அடுத்த புனஸ்பாடி பகுதியை சேர்ந்தவர் நடேசன் மகன் சந்தோஷ் குமார் (28), கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ஒரு சிறுமியிடம், வனப்பகுதியில் உள்ள மரங்களில் பழங்களை பறித்து தருவதாக ஆசை வார்த்தை கூறி காட்டுக்குள் அழைத்து சென்றுள்ளார். இதனை நம்பி சென்ற சிறுமிக்கு திடீரென சந்தோஷ்குமார் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். புகாரின் பேரில் குமார் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

News January 6, 2026

நெல்லை: இன்று இங்கெல்லாம் மின்தடை

image

திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (ஜன.6) மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பழையபேட்டை, காந்திநகர், குன்னத்தூர், பேட்டை, அபிஷேகப்பட்டி, களக்காடு சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் வி.கே.புரம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. SHARE

News January 6, 2026

ராணிப்பேட்டை GH-ல் பேரதிர்ச்சி!

image

கலவை அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்த ராஜேந்தரன் எனபவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர் ராஜேந்தரனுக்கு முதலுதவி செய்து தையல் போட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள், செவிலியர்களிடம் விசாரணை நடைபெறுவதாக மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News January 6, 2026

தூத்துக்குடி: மக்களே இன்று மிஸ் பண்ணிடாதீங்க…

image

தூத்துக்குடி அருகே கூட்டுடன்காடு பஞ்சாயத்து மங்களகிரி தனியார் பள்ளியில் இன்று (ஜன.6) காலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இதில், பொது மருத்துவம், இருதயம், எலும்பு, நரம்பியல், தோல், மகப்பேறு உள்பட 17 வகையான மருத்துவ பரிசோதனைகள் வழங்கப்படுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. SHARE

error: Content is protected !!