Tamilnadu

News January 6, 2026

குமரி: பஸ் மோதி கல்லூரி மாணவர்கள் பரிதாப பலி…

image

கட்டயன்விளை சேர்ந்தவர் அஷ்ரத் அலி(21), வெள்ளிச்சந்தை சேர்ந்தவர் அஜேஸ் (21). கல்லூரி மாணவர்களான இருவரும் இறுதியாண்டு சான்றிதழை வாங்குவதற்காக நேற்று பைக்கில் வெள்ளிச்சந்தை நோக்கி சென்றனர். சான்றிதழ் பெற்று கொண்டு வெள்ளமோடி சந்திப்பை கடந்த போது எதிரே வந்த தனியார் பள்ளி பேருந்து, பைக் மீது மோதியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் விசாரணை.

News January 6, 2026

புதுக்கோட்டை: பூட்டி கிடந்த வீட்டில் துணிகரம்

image

புதுகை டிவிஎஸ் கார்னர் பகுதியைச் சேர்ந்தவர் வன்னிதயால் (44). இவர் நேற்று முன்தினம் திருப்பதி சென்றுள்ளார். அவரது வீட்டில பணிபுரியும் அஞ்சலி தேவி நேற்று அவரது வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்து 50 சவரன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புதுகை டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 6, 2026

மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்தடை

image

பராமரிப்பு பணிகள் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்குட்பட்ட வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி நகர் முழுவதும், புங்கனூர், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூர், திட்டை, செம்மங்குடி, கடவாசல், எடமணல், திருக்கருகாவூர், திருமுல்லைவாசல், வேட்டங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை (ஜன.7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT.

News January 6, 2026

மூலனூர் அருகே துணிகர சம்பவம்!

image

தாராபுரம் அருகே மூலனூர் பகுதியில் அம்பாள் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான பல்பொருள் அங்காடியின் முன்பக்க ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமி கடையில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் ஒன்றை திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து அம்பாள் சக்திவேல் மூலனூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

News January 6, 2026

தி.மலை: தம்பதியர் எரித்து கொலை; முதல் கணவர் கைது

image

செங்கம் அடுத்த பக்கிரிபாளையம் ஏரிக்கரை பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சக்திவேல் (55) மற்றும் அவரது 2வது மனைவி அமிர்தம் (45) ஆகியோர் குடிசை வீட்டில் தூங்கிய போது மர்ம நபர்கள் குடிசை வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி தீ வைத்தனர். இந்நிலையில், தன்னுடன் குடும்பம் நடத்த வரமறுத்ததால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் முதல் கணவர் இருவரை உயிரோடு எரித்துள்ளார். போலீசார் அவரை கைது செய்தனர்.

News January 6, 2026

சிவகங்கை கொலையில் பழிக்கு பழி.. 7 பேர் அதிரடி கைது

image

சிவகங்கையில் கடந்த ஆண்டு நடந்த மனோஜ்குமார் கொலைக்கு பழிவாங்க, பயங்கர ஆயுதங்களுடன் திட்டமிட்டிருந்த 7 பேர் கொண்ட கும்பலை காரைக்குடி வடக்கு போலீசார் நேற்று கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில், அவர்களிடம் இருந்த 3 வாள்கள், ஒரு கார் மற்றும் 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

திருச்சி: பஸ் மோதி இளைஞர் தலை சிதறி பலி

image

தொட்டியம் அடுத்த கைகாட்டி திருச்சி – நாமக்கல் சாலையில் நேற்று கார்த்திகைப்பட்டியை சேர்ந்த கோழிக்கடை உரிமையாளர் ரமணா டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பஸ் ரமணாவின் டூவீலர் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய தொட்டியம் போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நாகை: கடலில் தவறி விழுந்தவர் மாயம்

image

நாகை அக்கரைப்பேட்டை டாடா நகரை சேர்ந்த அறிவு (36) உள்பட 13 மீனவர்கள் நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது படகில் இருந்த அறிவு கடலில் தவறி விழுந்து மாயமானார். தகவலறிந்த இந்திய கடற்படையினர் மாயமான மீனவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!