Tamilnadu

News January 6, 2026

செங்கை: தூக்கி வீசப்பட்டு வாலிபர் பலி!

image

ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஸ்டீபன் ராஜ் (30), கொளத்தூரில் நேற்று ஒரு கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்: சிறுமிக்கு காதல் வலை வீசி வன்கொடுமை!

image

விழுப்புரம் மாவட்டம், குமாரகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(26). இவர், கடந்த 2022ஆம் ஆண்டு திருமங்கலத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, தனக்கு திருமணம் ஆனதை மறைத்து, 15 வயது சிறுமிக்கு காதல் வலை வீசி, அவரிடம் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த வழக்கில் அவருக்கு 33 ஆண்டுகள் கடுங்காவல், ரூ.65 ஆயிரம் அபராதம், சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தர்மபுரியில் துடிதுடித்து பலி!

image

கம்பைநல்லூர் அருகே உள்ள வி.பள்ளிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சையப்பன்(54). கூலித் தொழிலாளியான இவர், சம்பவத்தன்று வீட்டில் இருந்து மொரப்பூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மொரப்பூர் அருகே சென்ற வாகனம் மோதியதில் கீழே விழுந்த அவர், படுகாயமடைந்தார். அவரது, உடலை மீட்டு, மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

News January 6, 2026

கள்ளக்குறிச்சியில் வாலிபர் துடிதுடித்து பலி!

image

ராமநத்தம் அடுத்துள்ள வாகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(28). இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். பொங்கல் விடுமுறைக்காக ப்சொந்த ஊருக்கு வந்த இவர், நேற்று(ஜன.5) மதியம் நண்பர்களுடன் அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றார். அப்போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 6, 2026

விருதுநகர் அருகே மதுபானக் கூடத்தில் பணம் திருட்டு

image

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே அரசு மதுபானக் கடையில் மதுபானக் கூடம் செயல்பட்டு வருகிறது. திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த கோபி மேலாளராக பணிபுரிந்து வருகிறாா். கோபி மதுபானக் கூடத்தை பூட்டிவிட்டு காலையில் வந்து பாா்த்தபோது பூட்டை உடைத்து ரூ. 6000 திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறுத்து வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 6, 2026

மதுரை: துணி காய போடும் போது நேர்ந்த சோகம்.!

image

மதுரை சோழவந்தான் அருகே எழுவம்பட்டி ஆறுமுகம் இவரது மகள் அனன்யா அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பும், மகன் சிவகார்த்திகேயன் தனியார் பள்ளியில் 3ம் வகுப்பும் படிக்கின்றனர். ஜன 2 ல் மாடியில் துணி காய போட சென்ற போது, வீட்டின் அருகே செல்லும் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நேற்று அனன்யா சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீஸார் விசாரிக்கின்றனர்.

News January 6, 2026

தென்காசி: ஆப் மூலம் பணம் பறிப்பு.. 3 சிறுவர்கள் கைது!

image

கடையநல்லூர் பகுதியை சோ்ந்த சிறுவனுக்கு மொபைல் செயலி மூலம் புளியங்குடி அருகே டி.என்.புதுக்குடியை சோ்ந்த சிலர் பழக்கமாகியுள்ளனர். அவர்கள் இச்சிறுவனை சொக்கம்பட்டி அருகே உள்ள முந்தல் மலைப்பகுதிக்கு வரவழைத்து, சிறுவனிடம் மிரட்டி அவனிடம் இருந்த பணத்தை பறித்துள்ளனா். இதுகுறித்த புகாரின் பேரில் சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 சிறுவா்களை கைது செய்தனர்.

News January 6, 2026

தேனி: விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை…!

image

கோடாங்கிப்பட்டி பகுதியை சோ்ந்தவா் ஜீவா (50). கூலித் தொழிலாளி. இவரது பெண் நண்பா் ராமேஸ்வரி வீட்டிற்கு நேற்று ஜீவா சென்றுள்ளார். அப்போது அவா் அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை மீட்டு GH-ல் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா். இதுகுறித்து ஜீவாவின் மனைவி அளித்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

error: Content is protected !!