India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டம் கீழக்குப்பம், வடக்குத்து, மேலப்பாளையம், ஒறையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.06) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்தந்த துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, மின்தடை நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கும்பகோணத்தில் கடந்த 2019-ஆண்டு பணம் கொடுக்கல், வாங்கலில் அருண் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செந்தில்குமார், வெங்கடேசன், சந்திரசேகரன், கதிர், பாலகுரு உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

குமாரபாளையம் தினசரி மார்க்கெட்டில் உள்ள ஸ்ரீ புங்கமாரியம்மன் மற்றும் முத்துமுனியப்பன் சுவாமிகள் 36-ஆம் ஆண்டு சந்து பொங்கல் விழாவை முன்னிட்டு, (7.01.2026) புதன்கிழமை தினசரி மார்க்கெட் ஒருநாள் விடுமுறை அதுசமயம், மார்க்கெட் வியாபாரிகளும், பொதுமக்களும், தவறாது கலந்து கொண்டு சந்து பொங்கல் விழாவினைச் சிறப்பிக்குமாறு நகர் மன்ற தலைவர் சஷ்டி விஜய்கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருவாரூர், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை யொட்டி, திருவாரூர்-காரைக்கால் இடையிலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 9, 11, 14 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் பராமரிப்பு மற்றும் பாதை மேம்பாட்டு பணிகளின் காரணமாக, திருவாரூர்-காரைக்கால் இடையிலான ரயில் சேவை ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதை யொட்டி, திருவாரூர்-காரைக்கால் இடையிலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 9, 11, 14 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் பராமரிப்பு மற்றும் பாதை மேம்பாட்டு பணிகளின் காரணமாக, காரைக்கால்-திருவாரூர் இடையிலான ரயில் சேவை ரத்து செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் படுக இன மக்களின் குலதெய்வம் ஹெத்தையம்மன் ஆகும். ஜனவரி மாதத்தில் ஹெத்தையம்மன் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஹெத்தையம்மன் பண்டிகை நாளை ஜனவரி 7-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி நாளை (7.01.2025) புதன்கிழமை உள்ளுர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார். SHAREIT

காமராஜபுரம்,செங்குந்தபுரம்,வடக்கு லட்சுமிபுரம், பெரியார் நகர்,பசுபதி லே அவுட், ஜவஹர் பஜார்,ஆண்டாங்கோவில் சாலை,திருமாநிலையூர், தெற்கு லட்சுமிபுரம்,அக்ரஹாரம், உழவர் சந்தை, காந்தி நகர், படிக்கட்டு துறை, திருகாம்புலியூர்,மக்கள் பாதை,கவுரிபுரம்,செல்லாண்டிப் பாளையம்,பெரியசாமி நகர், சுக்காலியூர்,திருப்பதி லே அவுட் , அண்ணா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி மாலை 5 மணி வரை மின்தடை

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி பிறந்த நாளையொட்டி, நேற்று (ஜன.5) ராணிப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி, கனிமொழி கருணாநிதியை நேரில் சந்தித்துப் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் கட்சி நிற்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து கோத்தகிரி செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ள தொட்டபெட்டா ஜங்ஷன் எதிரே இருக்கும் வன கணபதி கோவிலில் இன்று காலை கரடி உள்ளே புகுந்தது இதைக் கண்டால் பகுதி மக்கள் தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர் இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது

சேலம்: மேட்டூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி நாச்சிமுத்து பேத்தியும், கொளத்தூர் பகுதி வழக்கறிஞருமான நந்தினி தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். நேற்று தவெக சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் முன்னிலையில், ஓமலூர்,எடப்பாடி, மேட்டூர், தாரமங்கலம் உள்ளிட்ட பகுதியைச் மாற்றுக் கட்சியினர் 2500 பேர் தவெகவில் இணைந்தனர்.
Sorry, no posts matched your criteria.