Tamilnadu

News January 6, 2026

திண்டிவனம்: கத்தி குத்தில் முடிந்த TV சண்டை!

image

திண்டிவனம் அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(29). கூலித் தொழிலாளியான இவரது தம்பி, சம்பவத்தன்று மது குடித்து வீட்டுக்கு வந்தார். அப்போது டி.வியை அதிக சத்தத்தில் வைத்ததாக சொல்லப்படுகிறது. இதனை பாண்டியன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த கார்த்திக், பாண்டியனை கத்தியால் வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து கார்த்திக்கை கைது செய்தனர்.

News January 6, 2026

தி.மலையில் சோகம்; மரணத்தின் பிடியில் ஒரு நொடி!

image

வந்தவாசியை அடுத்த தேசூரைச் சோ்ந்தவா் சீனுவாசன் (48). தனியாா் பேருந்து ஓட்டுநரான இவா், இதே ஊரைச் சோ்ந்த நண்பா் பெருமாளுடன் (46) பைக்கில் செய்யாற்றுக்கு சென்றுவிட்டு ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா்.வந்தவாசி – சேத்துப்பட்டு சாலை, மழையூா் கூட்டுச் சாலை அருகே செல்லும்போது பைக் நிலைதடுமாறி நொடி பொழுதில் விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சீனுவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்.

News January 6, 2026

செங்கை: இன்ஸ்டா live-ல்; தண்டவாளத்தில் தலை!

image

செங்கல்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்த பெயிண்டர் ஜெகதீஸ்வரன் 22, காதலித்துத் திருமணம் செய்த கொண்டார். அதன் பின் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை, “21 வயதுக்கு முன் யாரும் திருமணம் செய்ய வேண்டாம்; 25 வயதுக்கு மேல் செய்தால் தான் வாழ்க்கை சரியாக இருக்கும்” என இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டார். பின்னர், விரைவு ரயில் முன் பாய்ந்தார்.ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 6, 2026

காஞ்சிபுரத்தில் 812 பேர் பலி

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலை விபத்துகளால் 2024-ல் 416 பேரும், 2025-ல் 396 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 1,545 பேர் காயமடைந்துள்ளனர். விபத்துகளைக் குறைக்கக் காவல்துறை சார்பில் சுமார் 578 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, கோடிக்கணக்கில் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஓட்டுநர்களின் கவனக்குறைவு மற்றும் சாலைப் பிரச்சனைகளால் விபத்துக்கள் நடந்த வர்ணம் இருக்கிறது.

News January 6, 2026

கள்ளக்குறிச்சி: மருமகளை கழுத்தறுத்து கொன்ற மாமியார்!

image

சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மரியருசோரியோ(35). இவரது மனைவி நந்தினி(29). இவரைக் கடந்த 29அம் தேதி முதல் காணவில்லை எனப் புகார் அளித்ததன் பேரில் நடந்த விசாரணையில், மரியருசோரியாவின் தாயார் கிறிஸ்டோப் மேரி, ஏற்கனவே திருமணமான தனது மருமகளை, தன் மகன் காதலித்து மறுமணம் செய்தது தனக்கு பிடிக்காததால் தனது தோழி எமிலியுடன் சேர்ந்து மறுமகளை கழுத்தறுத்து கொலை செய்ததாக வாக்குமூலமளித்தார்.

News January 6, 2026

மயிலாடுதுறையில் கவியரசருக்கு இசை அஞ்சலி

image

மயிலாடுதுறையில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி ரசிகர் மன்றம் சார்பில் கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்கு இசை அஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சொல்லின் செல்வர் ராமசிதம்பரம் தலைமை வகித்தார். அகில இந்திய சிவாஜி மன்ற பொருளாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜ்குமார் கலந்துகொண்டு கவியரசர் கண்ணதாசன் படத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தி சிறப்புரையாற்றினார்.

News January 6, 2026

புதுக்கோட்டை: விபத்தில் இளைஞர் பரிதாப பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்த முத்துடையான்பட்டி பெட்ரோல் பங்க் அருகே நேற்று அருண் சக்சேனா (33) என்பவர் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் சைக்கிளின் பின்புறத்தில் மோதியதில் அருண் சச்சேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த வெள்ளனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 6, 2026

கடலூர் அருகே பிடிபட்ட கொள்ளையன்

image

குறிஞ்சிப்பாடி சத்தியம் நகரைச் சேர்ந்த செல்வநாதன் (69) என்பவரது வீட்டில், அடையாளம் தெரியாத நபர் வீட்டினுள் நுழைந்து பீரோவின் சாவியை எடுத்து, 12 சவரன் தங்க நகை மற்றும் ரூ.40,000 பணத்தை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருடனை தேடிய நிலையில், வடலூர் புதுநகரைச் சேர்ந்த அர்ஜுன் (21) என்பவரை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.

News January 6, 2026

திருப்பத்தூர்: காய்கறி வியாபாரி வீட்டில் கைவரிசை!

image

ஜோலார்பேட்டையை அடுத்த சின்னமூக்கனூரை சேர்ந்த காய்கறி வியாபாரி சவுந்தர்ராஜன். இவர் நேற்று (ஜன.5) பணம் எடுக்க பீரோவை திறக்க முயன்றபோது பீரோ உடைக்கப்பட்டிருந்தது. மேலும் அதிலிருந்த 9½ பவுன் நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 6, 2026

ராணிப்பேட்டையில் நாளை மின்தடை; உங்க ஏரியா இருக்கா?

image

ராணிப்பேட்டை, முகுந்தராயுபுரம் மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் நாளை (ஜன.3) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. லாலாபேட்டை, தக்காம்பாளையம், நெல்லிக்குப்பம், ஏகாம்பரநல்லூர், கத்தாரிகுப்பம், பிள்ளையார்குப்பம், சிப்காட், கல்மேல்குப்பம், வில்வநாதபுரம், எருக்கம்தொட்டி, கன்னிகாபுரம், கல்புதூர், நரசிங்கபுரம், சீக்கராஜபுரம், மற்றும் கிருஷ்ணாவரம் ஆகிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும்.

error: Content is protected !!