Tamilnadu

News January 6, 2026

விபத்தில் சிக்கிய நடிகர் எஸ்.ஜே சூர்யா

image

கில்லர் திரைப்பட படப்பிடிப்பின்போது இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா படுகாயம் அடைந்தார். சென்னை பாலவாக்கத்தில் 3ஆம் கட்ட படப்பிடிப்பு நடந்த போது ரோப் கயிறு உதவியுடன் சண்டைக்காட்சியில் எஸ்.ஜே.சூர்யா நடித்தபோது இரும்பு கம்பியில் மோதி விபத்து ஏற்பட்டது. கம்பி மீது விழுந்ததில் எஸ்.ஜே.சூர்யாவின் இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

News January 6, 2026

JUST IN : மதுரை வந்தார் முதல்வர்

image

மதுரை விமான நிலையத்தில் இன்று (ஜன.06) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தந்தார். இதில் அமைச்சர் மூர்த்தி, கட்சியின் உயர்நிலை தலைவர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் விமான நிலையத்தில் வரவேற்று, உற்சாக வாழ்த்து தெரிவித்தனர். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து திண்டுக்கல்லில் அரசு நிகழ்ச்சிகளில் நாளை கலந்து கொள்ள உள்ளார்.

News January 6, 2026

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வழங்கிய போக்குவரத்து ஆய்வாளர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரப் பகுதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு வாசகங்கள் உள்ளடக்கிய துண்டு பிரசுரங்களை கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். குறிப்பாக வாகனங்களுக்கு அனைத்து ஆவணங்களும் வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டும் நபர்களை பாராட்டினார்.

News January 6, 2026

தொகுப்பு வழங்குதல் சம்பந்தமாக ஆலோசனை கூட்டம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில், பொங்கலுக்கு குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்குவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் சண்முகம், மாவட்ட வழங்கல் அதிகாரி விஜியகுமார் மற்றும் அரசு அலுவலகங்களும் கலந்து கொண்டனர்.

News January 6, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (ஜன.06) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 6, 2026

ஜவுளி தொழில் மாநாடு – பயன்படுத்திக் கொள்ள அழைப்பு

image

தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) இணைந்து நடத்தும் “International Textile Summit-360* என்ற சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 மற்றும் 30   கொடீசியா வளாகம் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளதுவிபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 8220017071, 8220656182 தென்காசி மாவட்டஜவுளித் தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் தகவல்

News January 6, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (ஜன.06) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News January 6, 2026

வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு

image

காஞ்சிபுரத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு, நடைபெற்று வரும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/ ஆட்சியர் கலைச்செல்வி மோகன், பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

News January 6, 2026

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் நெகிழ்ச்சி நடவடிக்கை!

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜே.யு. சந்திரகலா-விடம் நேற்று (5.1.2026) சுமித்ரா என்ற மாற்றுத்திறனாளி பெண் கோரிக்கை மனு அளித்தார். மனுவைப் பெற்ற ஆட்சியர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, ரூ.18,000 மதிப்பிலான சக்கர நாற்காலியை அவருக்கு வழங்கினார். இதனால் அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

News January 6, 2026

தமிழ்நாடு அரசின் SDAT பயிற்சியாளராக சூப்பர் வாய்ப்பு!

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பல்வேறு விளையாட்டுகளுக்கான Coaches, Para-Sports Coaches இடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதில் பணியாற்ற விரும்புவோர், தகுதி மற்றும் திறமை உள்ளிட்ட விவரங்களுடன் sdat.tn.gov.in தளத்தில் விண்ணப்பிக்கலாம் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்

error: Content is protected !!