India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொங்கலுக்காக தென் மாவட்டங்களைச் சேர்ந்தோர் ஜன-9 முதல் 15 வரை ஊருக்கு செல்லும் போது போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, OMR, திருப்போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு வழி, அல்லது வண்டலூர் வெளிச்சுற்று சாலையை தேர்வு செய்யலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் ஜி.எஸ்.டி சாலை, சென்னை மீனம்பாக்கம், கிண்டி வழியாக செல்ல வேண்டாம் கடுமையான போக்குவரத்து ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறள் வார விழாவினை முன்னிட்டு ஜன.21 அன்று திருப்பூரில் நடைபெற உள்ள குறள் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்கான மாவட்ட அளவில் முதல் நிலை எழுத்து தேர்வு ஜன.9 அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்கு உதவி இயக்குனர் தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சியர் அலுவலகம் அல்லது 045622596 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

குறள் வார விழாவினை முன்னிட்டு ஜன.21 அன்று திருப்பூரில் நடைபெற உள்ள குறள் வினாடி வினா போட்டிகளில் பங்கேற்பதற்கான மாவட்ட அளவில் முதல் நிலை எழுத்து தேர்வு ஜன.9 அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும் கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வதற்கு உதவி இயக்குனர் தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சியர் அலுவலகம் அல்லது 045622596 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

திருவட்டார் அருகே வேர்கிளம்பி பகுதியில் நேற்று மாலை பள்ளி வாகனமும் டெம்போவும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 6 மாணவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர். இந்த விபத்து குறித்து திருவட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” (ஜன.6) இன்று இரவு 11 மணி முதல் நாளை (ஜன.7) காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்

கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் சத்திய சூரஜ் (27). இவர் கடந்த இரண்டு மாதங்களாக உடல்நிலை குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு சிகிச்சை பெற்று உடல்நிலை முன்னேற்றம் அடையவில்லை. இதனால் வாழ்க்கை விரக்தி அடைந்து, சத்திய சூரஜ், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து செல்வபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.06) அரசு உறுதிமொழிக் குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. குழுத் தலைவர் திரு. வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,ஆட்சியர் திரு. ச. தினேஷ் குமார், எம்.எல்.ஏ-க்கள் சா. மாங்குடி, எம்.கே. மோகன், மு. சக்கரபாணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு, மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அரசு திட்டங்கள் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1,595 கோடி மதிப்பீட்டில் 111 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், 212 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை 10.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அனைத்து பணிகளையும் துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இன்று (ஜன.06) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி இன்று (ஜன.06) அறிக்கை வெளியிட்டார். அதில் அனைத்து உயர்நிலை/ மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாளை ஜன.07 அரையாண்டு பொதுத் தேர்வுக்கான தேர்ச்சி மேல் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என்றும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.