India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் விளையாட்டு மேம்பாட்டு துறையின் கீழ் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு மையத்தின் கட்டுமான பணிகளை இன்று ஜன.06 ஆட்சியர் சிவசௌந்தரவல்லி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பிறகு கட்டுமானத்திற்கு வந்திருக்கும் பொருட்களையும் ஆய்வு செய்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்டு விழா பச்சை பரப்புதலுடன் தொடங்கி கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்நிலையில் 8-ம் நாளான இன்று இரவு இராப்பத்து மண்டபத்தில் ஆண்டாள், ரங்கமன்னார், பெரிய பெருமாள் மற்றும் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், இன்று (ஜன.6) இரவு 10 முதல், காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

வேலூர் மாவட்டத்தில் 2026-ம் ஆண்டு எருது விடும் விழா நடத்த அனுமதி கோரும் விண்ணப்பங்கள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளன. இங்கு <

வானூர் வட்டம் வானூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுவரும் கூடுதல் மருத்துவமனை கட்டடப்பணிகளை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (ஜன.06) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வானூர் வருவாய் வட்டாட்சியர் வித்யாதரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முத்துகுமார், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூரில் 15 ஆசிரியர்கள், 15 அரசு ஊழியர்களைத் தேர்வு செய்து குறளாசிரியர் மாநாடு நடத்த எழுத்துத்தேர்வு (ஜன.9) அன்று மதியம் 2 மணிக்கு திருவள்ளூர், ஸ்ரீநிகேதன் பதின்ம மேனிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் தேர்வு மையத்திற்கு நேரடியாக வந்து பதிவு செய்து தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 7904242970, 9790172986, 8056010146 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

சேலம் மாநகரில் இன்று (06.01.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஜன.06) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் சமூகநீதி கல்லூரி விடுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு, சென்னையில் 2 மாதங்களுக்கு முன்பு கலை, இலக்கியம் & விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 7 கல்லூரிகளைச் சேர்ந்த 421 குழுக்களில் 132 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கான கேடயம் & பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

சென்னை காவல் துறையில் 21 காவல் ஆய்வாளர்களுக்கு இடமாற்ற உத்தரவை காவல் ஆணையர் அருண் இன்று பிறப்பித்துள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த 20 ஆய்வாளர்களுக்கு Law & Order மற்றும் Crime பிரிவுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், மாம்பலம் உள்ளிட்ட பகுதிகள், AWPS மற்றும் Special Crime Units-ல் மாற்றம் செய்யப்பட்டு, உடனடியாக புதிய இடங்களில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.