India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டையைச் சேர்ந்த விவசாயக் கூலி ஜெகதீசன் (35) மற்றும் அவரது நண்பர் வெங்கடேசன் (35) ஆகியோர், கறவை மாடு வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது செவிலிமேடு புறவழிச்சாலையில் தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சோளிங்கர் அருகே ஆயில் கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஸ்டீபன் (26), கடந்த 16-ம் தேதி முதல் காணாமல் போயிருந்தார். அவரைப் போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் அருகே ஒரு மரத்தில் அவர் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். இது தற்கொலையா? கொலையா என்று போலீசார் விசாரித்த வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த நேதாஜி என்பவர் நேற்று (ஜன.06) இரவு இருசக்கர வாகனத்தில், ஆம்பூர் அருகே சென்றுகொண்டிருந்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் நேதாஜி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். உடலை மீட்ட ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கீரனூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட கீரனூர், விராலிமலை, குன்றாண்டார்கோவில், கிள்ளுக்கோட்டை, மாத்தூர், தொண்டைமான் நல்லூர் ஆகிய பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை கீரனூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. புதுகை மேற்பார்வை பொறியாளர் பொன் ஜெயமேரி தலைமையில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை கூட்டம் நடைபெறும். இதில், பொதுமக்கள் தங்களின் குறைகளை தெரிவிக்கலாம். SHARE IT

தாம்பரம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் சக்திவேல் (39), படப்பை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது வண்டலூர் அருகே சாலைத் தடுப்பில் உரசி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மேலூர் அருகே தெற்குதெருவை சேர்ந்தவர் பாண்டி மகன் கணேசன் (24). திருமணமாகாத இவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது. சில நாட்களாக மன அழுத்தத்தில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் ஊராட்சியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியின் மாணவர்கள் விடுதி கட்டடங்கள் கட்டும் பணிக்காக வந்த அமியாபிஷோயி(34) என்ற வடமாநில இளைஞர், அப்பணியில் இருந்த போது, இரண்டாவது மாடியில் இருந்து விழுந்ததில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆத்தூர் புங்கவாடி பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (35). இவர் தனியார் நூற்பாலையில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார். நேற்று மதியம் சார்வாயில் இருந்து ஆத்தூர் நோக்கி டூவீலரில் வந்து கொண்டிருந்தார். காட்டுக்கோட்டாய் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் வேல்முருகன் மீது மோதியதில் அவரது கை துண்டானது. மக்கள் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை!

பர்கூர், மல்லப்பாடியைச் சேர்ந்தவர் திருமலை(30). எலக்ட்ரீசீயனான இவர், நேற்று முன் தினம் சின்ன பர்கூரில் புதிதாக கட்டப்பட்டு வரு வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தீடீரென மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தருமபுரி: பொம்மிடி அருகே உள்ள சுரக்காபட்டியை சேர்ந்தவர் வடிவேல் (90). இவர் வயது முதிர்வின் காரணமாக சுரக்காபட்டியில் தனது மகள் ராணி வீட்டில் வசித்து வந்தார். அங்கு முதியவர் உயிரிழந்தார். இதனிடையே தனது தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வடிவேலின் மகன் மாதவன் பொம்மிடி போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.