India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நேற்று விசிக எம்பி ரவிக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விசிக தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் பங்குபெற்றனர். அப்போது, பேசிய எம்பி ரவிக்குமார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பாஜகவின் பிடியில் சிக்கித் தவிக்கிறார் என பேசினார்.

குன்னுார்- ஊட்டி சாலை பாலவாசி அருகே வளைவில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் விழுந்த மரத்தின் அடிப்பாகம் அகற்றப்படவில்லை. இதனால், குன்னுாரில் இருந்து ஊட்டி செல்லும் அரசு பஸ்கள் உட்பட பிற வாகனங்கள், இதன் மீது மோதி விபத்துக்குள்ளாகி பலருக்கும் காயம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறையினர் இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காரைக்கால் போக்குவரத்து துறையின் py-02 Z வரிசையில் உள்ள பேன்சி எண்கள் https://parivahan.gov.in/fancy என்ற இணையதள மூலம் வரும் ஜன.13ம் தேதி மாலை 4.30 மணி வரை ஏலம் விடப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தேவையான username மற்றும் password-ஐ மேற்கண்ட இணையத்தில் ‘New Public User’ மூலம் வரும் 12ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என காரைக்கால் வட்டார போக்குவரத்து அலுவலர் கூறியுள்ளார்.

மன்னார்குடி வினோபாஜி தெருவை சேர்ந்தவர் சையது அலி. இவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடையில் கடந்த 4-ந்தேதி இரவு புகுந்த மர்ம நபர்கள் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.60,000 பணத்தை திருடி சென்றனர். இதுகுறித்து மன்னார்குடி போலீசார் நடத்திய விசாரணையில், சையது அலியின் மகன் முகமது பைசல் (24) பணத்தை திருடியது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.

நாகை எஸ்.பி.பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் வேளாங்கண்ணி போலீசார் நேற்று இரவு மாணிக்கப்பங்கு என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் ரூ.50,000 மதிப்புள்ள 700 புதுவை மாநில சாராய பாட்டில்களை கடத்தி வந்த பாண்டியன், கிருபாநிதி ஆகிய இருவரையும் போலீசார் செய்தனர். இதையடுத்து மதுபாட்டில்கள் மற்றும் 3 டூவிலர்களை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய ஒரு வாலிபரை தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையில் சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் முதல் நிலை எழுத்து தேர்வு போட்டி ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி கோரிமேடு பகுதியில் உள்ள அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார் விருப்பம் உள்ளவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்

திண்டுக்கல்லில் இன்று காலை 10:05 மணிக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், ரூ.1082.86 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.இதனை தொடர்ந்து மதுரை சென்று விமானம் மூலம் சென்னை செல்கிறார். முதலமைச்சர் வருகையையொட்டி திண்டுக்கல் டி.ஐ.ஜி., சுவாமிநாதன், எஸ்.பி., பிரதீப் தலைமையில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

மதுரை அருகே ஆர்.வி.பட்டியை சேர்ந்தவர் செந்தில் என்பவரது மனைவி கலையரசி (37). செந்தில் திருவிழா கடைகளில் பேன்சி பொருள்கள் விற்பனை செய்து வருகிறார். கலையரசி
மனநிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். வீட்டில் தனியாக இருந்த அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து திருநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆண்டிபட்டி அருகே உள்ள தர்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி. இவரது மகன் அரவிந்த். இவர் சிறுவயதில் இருந்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில், உடல்நிலை பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்து வந்த அரவிந்த் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மயிலாடும்பாறை காவல்துறை வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த தம்பதியர் ஐயப்பன், சிவ ஆனந்தி (28). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளன்ர். சிவ ஆனந்தி ராஜாக்கமங்கலம் பஞ்சாயத்தில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டதால் மன வேதனையில் இருந்த சிவ ஆனந்தி ஜன.5-ஆம் தேதி குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.