India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென்காசி, சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த மாரிமுத்து(36) என்பவர் குடிபோதையில் நேற்று கிணற்று குளிக்க சென்ற போது எதிர்பாரவிதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர், விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்,இது குறித்து சங்கரன்கோவில் போலீசார் விசாரணை.

தொப்பூரில் உள்ள நல்லூர் மாரியம்மன் கோயில் அருகே 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த வாலிபர் யார்..? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் சந்திப்பு ரயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் 12667/68, 12689/90, 22657/68 ஆகிய மூன்று ரயில்களும் மறு அறிவிப்பு வரும் வரை கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் என தென்னக ரயில்வேயில் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் வசித்து வரும் பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி சுனில் குமார் வீட்டில் 100 சவரன் நகை 5 கிலோ வெள்ளி பொருட்கள் நான்கு லட்சம் ரூபாய் பணம் திருடு போனதாக காவல்துறையினரிடம் இன்று ஜனவரி 6 ஆம் தேதி புகார் அளித்ததின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை சின்னங்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (51). மீனவரான இவர், நேற்று முன்தினம் அதிகாலை சக மீனவர்களுடன் உப்புக்காடு அருகே வலை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்த போது திடீரென படகில் இருந்து தவறி கடலில் விழுந்துள்ளார். இதையடுத்து நீண்ட நேரத்திற்கு பிறகு குமார் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 மற்றும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 5,41,007 ரேஷன் அட்டை தாரர்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர். இதன்படி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் ரூ.3,000 பொங்கல் பரிசு தொகைக்காக 162 கோடியே 30 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. SHARE

தமிழ்நாடு அரசு இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 மற்றும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கவுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 4,03,006 ரேஷன் அட்டை தாரர்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர். இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.3,000 பொங்கல் பரிசு தொகைக்காக 120 கோடியே 9 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. SHARE

ராணிப்பேட்டையைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி சதீஷ் (27), ஈரோட்டில் வேலை தேடிவிட்டு ரயிலில் ஊர் திரும்பியபோது, மேலஆலத்தூர்-குடியாத்தம் இடையே படிக்கட்டில் அமர்ந்து பயணித்தபோது தவறி விழுந்து பலியானார். தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் சக்திவேல் (39), நேற்று வண்டலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலைத் தடுப்பில் உரசி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியதில், சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மையம் சார்பில், வரும் ஜன.10-ம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 18 முதல் 35 வயதுடைய, 8-வது முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் பங்கேற்கலாம் நாகை மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.