India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு அரசு இந்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000 மற்றும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கவுள்ளது. மதுரை மாவட்டத்தில் மட்டும் 9,46,728 ரேஷன் அட்டை தாரர்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர். இதன்படி, மதுரை மாவட்டத்திற்கு மட்டும் ரூ.3,000 பொங்கல் பரிசு தொகைக்காக 283 கோடியே 85 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. SHARE

விழுப்புரம்: நாகல்பாக்கத்தைச் சேர்ந்தவர் குப்பு (60). இவர் தனது வீட்டின் அருகே குப்பையை தீ வைத்து எரித்துள்ளார். அப்போது அருகில் வசிக்கும் முத்துலட்சுமி மற்றும் பரிமளா ஆகிய 2 பேரும் குப்புவை தகாத வார்த்தைகளால் திட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாமக்கல் வேலகவுண்டம்பட்டி அருகே கருங்கல்பட்டியை சேர்ந்தவர் சின்னமுத்து (75); விவசாயி. இவர், நேற்று வேலகவுண் டம்பட்டி, பஸ் ஸ்டாப் அருகே சாலையை கடந்தபோது, திருச்செங்கோடு நோக்கி சென்ற மினி ஆட்டோ மோதியது.இதில், சின்னமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி, தாதம்பட்டிமேட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் (26) என்பவரை கைது செய்தனர்.

மார்க்கையன்கோட்டை, போடி துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் நாளை (ஜன.8) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சின்னமனூர் டவுன், பழவராயன்பட்டி, குந்தளநாய்க்கன்பட்டி, அம்மாப்பட்டி, போடி நகர்ப்புறம், குரங்கணி, மீனாட்சிபுரம், அணைக்கரைப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. SHARE IT

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் சரண்யா தேவி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று (ஜன.5) திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது, ஜன்னல் வழியாக வீசப்பட்ட பார்சலில் இருந்து ஒரு கிராம் தங்க நாணயம் மீட்கப்பட்டது. மேலும், கணக்கில் வராத ரூ. 25,000 ரொக்கம், 3 கிராம் தங்க நாணயங்கள், 50 டைரிகள், 15 செட் பேண்ட்-சர்ட் துணிகள் பறிமுதல் செய்யப்பட்டன .

தெங்கம்புதூர், ராஜாக்கமங்கலம் உபமின் நிலையத்தில் நாளை (ஜன.8) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், மதுசூதனபுரம், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளான்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம் (ம) அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

குடியாத்தம் தரணம்பேட்டையை சேர்ந்த சையத் நியாஸ் (31). இவர் சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பகிர்ந்ததாக கடந்த 2020-ம் ஆண்டு குடியாத்தம் மகளிர் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், சையத் நியாஸ்க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சி: வடபூவனூரைச் சேர்ந்த மணி (65), நேற்று முன்தினம் வீடு தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வருவதாக கூறிச் சென்றார். அதன்பின்னர் அவர் வீடுதிரும்பவில்லை. இந்நிலையில், நேற்று கிளியூரில் திருமலை என்பவருக்கு சொந்தமான வயலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிமளம், அலியானிலை, தல்லாம்பட்டி, அறந்தாங்கி, மறமடக்கி ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.07) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அரிமளம், அலியானிலை, தல்லாம்பட்டி, அறந்தாங்கி, மறமடக்கி ஆகிய பகுதிகள் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இன்று (ஜன.7) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணி செட்டிபாளையம், சந்தியா நகர், முதலிபாளையம், பூனாண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. (SHARE)
Sorry, no posts matched your criteria.