Tamilnadu

News January 8, 2026

தி.மலையில் துடிதுடித்து பலி!

image

தி.மலை: வந்தவாசியை அடுத்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(32). இவர், சென்னை, ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். இந்நிலையில், உத்திரமேரூரில் அடகு வைத்த நகையை மீட்கச் சென்ற போது, வெங்கமேடு பகுதியில், தடுமாறி கீழே விழுந்து, படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது, ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

News January 8, 2026

திருவள்ளூரில் தீயில் கருகி பலி!

image

கும்மிடிப்பூண்டி அடுத்த ரெட்டம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட குருவியகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லம்மாள்(75). தனிய வசித்து வந்த இவர், கடந்த டிச.29ஆம் தேதி நள்ளிரவில் குளிர் காய பழைய காகிதங்களை எரித்துக் கொண்டிருந்தார். அப்போது, அவரது உடையில் தீப்பிடித்து எரிந்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்றுவந்தவர், நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார்.

News January 8, 2026

ராணிப்பேட்டையில் இன்று மின் தடையா?

image

ராணிப்பேட்டை துணை மின்நிலையத்தில் இன்று (ஜன.8) அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ராணிப்பேட்டை நகரம், நவல்பூர், காரை, புளியங்கண்ணு, பாரதி நகர், பெரியார் நகர், அவரக்கரை, சிப்காட், சிட்கோ, பெல், தெங்கால், புளியந்தாங்கல், அக்ராவரம், சீக் கராஜபுரம், வானாபாடி, செட்டிதாங்கல், தண்டலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் இல்லை.

News January 8, 2026

ஈரோடு அருகே வெடித்து சிதறிய TV

image

ஈரோடு: குறிச்சி அருகே உள்ள கண்ணப்பனின் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் நேற்று இரவு எல்இடி டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று டிவி வெடித்து சிதறியதில் வீட்டிலிருந்த பொருட்கள் தீ பற்றி எரிந்தது. இதுகுறித்த தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 8, 2026

தருமபுரியில் துடிதுடித்து பலி!

image

தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை, தொப்பூர் நல்லூர் மாரியம்மன் கோயில் எதிரே 5-தேதி அன்று இரவு 10 மணிக்கு அளவில் 25 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர், சாலையை கடக்க முயன்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதில் விஏஓ விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில், யார் என்பது குறித்து, இன்று தொப்பூர் போலீசார் விசாரணை நடத்துகிறது.

News January 8, 2026

கோவை அருகே கோர விபத்து! உடல் கருகி பலி

image

கோவை, திருமலையாம் பாளையம் அருகே இரும்பு குழாயில் கார் மோதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் காரை ஓட்டி வந்த ஆகாஷ், முரளி ஆகிய 2 பேர் உயிர் தப்பிய நிலையில், காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த விமல்ராஜ் தீயில் கருகி உயிரிழந்தார். மூவரும் தனியார் கார் ஷோரூம் வேலை பார்த்து வரும் நிலையில், பணி முடிந்து திரும்பும் போது இவ்விபத்து நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 8, 2026

தேனியில் நாளை இங்கெல்லாம் மின் தடை…!

image

அன்னஞ்சி, வைகை அணை துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.9) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அரைப்பாடிதேவன் பட்டி, சிவாஜி நகர், கருவேல்நாயக்கன்பட்டி, வைகை அணை, ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 8, 2026

தென்காசி: இளைஞர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு

image

தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டம் தென்காசியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித சரியான வேலை எதுவும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். இதனை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் கமல் கிஷோர் அழைப்பு விடுத்துள்ளார்.

News January 8, 2026

விழுப்புரத்தில் த.வெ.க. நிர்வாகி கைது!

image

விழுப்புரம்: திண்டிவனத்தைச் சேர்ந்த முருகன் என்பவர், தனது வீட்டில் இருந்த 9.5 சவரன் நகைகள் திருடு போனதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். இது குறித்து போலீசார் விசாரித்த போது, முருகனின் உறவினரான த.வெ.க. நிர்வாகி மணிகண்டன் நகைகளை திருடியதை கண்டுபிடித்தனர். அதேபோல், யாரும் இல்லாத சமயத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நகைகளைத் திருடியதை மணிகண்டன் ஒப்புகொண்டார். தொடர்ந்து அவரை கைது செய்தனர்.

News January 8, 2026

விருதுநகர் ஒரே நாளில் 415 பேர் கைது

image

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியராக்குவேன் என்ற முதல்வரின் தேர்தல் வாக்குறுதி 313ஐ நிறைவேற்றுதல் உள்பட பல அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட தலைவர் பவுன்தாய் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.
மறியலில் ஈடுபட்ட 415 பேரை சூலக்கரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!