India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பழைய வத்தலக்குண்டுவைச் சேர்ந்த முத்துப்பாண்டி (50) என்பவர், கோட்டைப்பட்டி சாலையில் உள்ள தோட்டத்தில் வேலை செய்தபோது விஷவண்டு கடித்ததில் மயங்கி விழுந்தார். தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாய நிலங்களில் பணிபுரிபவர்கள் விஷவண்டு கூண்டுகளை கண்டால் இங்கே கிளிக் செய்து புகார் அளியுங்கள்.

தாரமங்கலம் அருகே கே.ஆர்.தோப்பூரை சேர்ந்த தறித் தொழிலாளி சுரேந்திரன், (42). இவர் கிருஷ்ணம் புதுார் ஆவின் பாலகம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வந்த, பைக், சுரேந்திரன் மீது மோதியது. இதில் படு காயம் அடைந்த சுரேந்திரனை, மக்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர் உயிரிழந்தார். தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 2026ஆம் ஆண்டிற்கான இலவச பயண அட்டை ஆன்லைன் வழியாக வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். நேற்று(ஜன.7) முதல் ஜன.31 வரை அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து சிறப்பு முகாம் நடைபெறும். தேவையான ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயனடைய மாற்றுத்திறனாளிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

வேலூர் அடுத்த காட்பாடியை தேர்ந்தவர் முரளிதரன். பெற்றோரை இழந்த இவர் தனது அக்காவின் பராமரிப்பில் இருந்து வந்தார். பி.எட். முடித்த முரளிதரனுக்கு வேலை கிடைக்கவில்லை, திருமணமும் ஆகவில்லை. இதனால் விரக்தியிலிருந்த அவர் வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பிரம்மபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். *தற்கொலை எதற்கும் தீர்வல்ல*

நீலகிரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.3000 விநியோகம் இன்று முதல் வரும் வரும் 13ம் தேதி வரை சுழற்சி முறையில் ரேஷன் கடைகளில் தகுதி வாய்ந்த 2,18,576 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் ஏதேனும் புகார் இருந்தால் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1967 மற்றும் 18004255901, 04232441216 அழைக்கலாம்.

அம்பையை சேர்ந்தவர் கட்டிடட தொழிலாளி சேர்மராஜ் (26). இவர் நேற்று திசையன்விளை அருகே வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனை செல்ல டூவீலரில் ஏறியுள்ளார். அப்போது மயக்கமான அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சேர்மராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திசையன்விளை போலீசார் விசாரணை.

கிருஷ்ணகிரி, தேவசமுத்திரத்தை சேர்ந்தவர் சூர்யராஜ் (28). புத்தாண்டன்று அப்குதியை சேர்ந்த மனோஜ் (28), சபரி (28) ஆகியோர் மோட்டார் சைக்கிளை சாலையின் நடுவே நிறுத்தி இருந்தனர். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனோஜ் தரப்பினர் சூர்யராஜை பீர் பாட்டிலால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

காஞ்சிபுரம்: குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (16) +2 படித்து வந்துள்ளார். நேற்று இரவு டியூஷன் முடித்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, கோவூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், சரவணன் வந்த பைக்கும் நேருக்கு நேர் வேகமாக மோதியது. இதில், சரவணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மாணவன் பைக்கை வேகமாக ஓட்டியதே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி – சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. வண்டி எண்: 06151 என்ற இந்த ரயிலானது ஜன.12 மற்றும் 19ம் தேதி சென்னையில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 12.15க்கு தூத்துக்குடிக்கு வரும். 06152 என்ற ரயிலானது ஜன.13 மற்றும் 20ம் தேதி தூத்துக்குடியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.45க்கு சென்னைக்கு வரும். SHARE

மறைமலைநகரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை ஓரமாக செல்லுமாறு காவலர் செந்தில் சைகை காட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர், வேகத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, காவலர் மீதே காரை ஏற்றுவது போல முன்னேறிச் சென்றார். உடனடியாகச் காவல்துறையினர் கரை மடக்கிப் பிடித்தனர். காரிலிருந்த ஓட்டுநர், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.