India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அரக்கோணத்தை அடுத்த சாலை கிராமத்தை சேர்ந்தவர் மேகவர்ணன் (58). இவர் ராமாபுரம் அரசு ஆரம்பம் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் தகராறில் ஈடுபட்ட பெண்ணை மேகவர்ணன் கல்லால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பெண் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அரக்கோணம் போலீசார் ஆசிரியர் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகேயுள்ள டி.கீரனூரைச் சேர்ந்தவர் ராணி (55). இவா் கடந்த 5-ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு, பெங்களூரு சென்றுள்ளார். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி, ரூ.1.20 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடையநல்லூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி ஆட்டோ டிரைவர் சையது மசூது (44). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டில் அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்படுவதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் குடும்ப பிரச்சினை காரணமாக தனது அறையில் அவர் தூக்கிட்டு கொண்டார். அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனை கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பரிசு பெறலாம் சென்னை முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்றே டோக்கன்களைக் கொடுத்து பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3,000, வேட்டி- சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பும் வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

அரண்மனைப்புதூரை சோ்ந்த மணிகண்டன், வினோத்குமாா் ஆகிய இருவரும் டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வருகின்றனர். இருவருக்கும் இடையே டைல்ஸ் உபரணங்கள் கொடுத்து வாங்குவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த வினோத்குமார், மணிகண்டனை அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் தேனி GH-ல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிந்து வினோத்குமாரைக் கைது செய்தனா்.

காஞ்சிபுரம்: வஞ்சுவாஞ்சேரி பகுதியில் ரஞ்சித் என்பவரது பைக்கை மர்ம நபர்கள் 2 பேர் திருடிச் சென்றுள்ளனர். பின்னர், அதே திருட்டு பைக்கில் சென்ற மர்ம நபர்கள், அவ்வழியாக வேலைக்கு சென்றுகொண்டிருந்த மகேந்திரன் என்பவரை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் தனது கையில் பணமில்லை எனக் கூறியதும், GPAY மூலம் பணத்தை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவாரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் கால வாக்குறுதிப்படி சிறப்பு ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்து 750-ஐ வழங்க வேண்டும்; ஐகோர்ட்டு தீர்ப்பின் படி 2.57 காரணியால் ஓய்வூதியம் மற்றும் ஊதியத்தை திருத்தி அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

குளித்தலை அருகே சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்த வி.ஏ.ஓ.குமாரபாண்டியன் மகன் குகன் பாண்டியன் (11), இவர் சத்தியமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள வீட்டில், தாயின் பானி பூரி கடையில் சுவிட்ச் பாக்சில் பிளக் பொருத்திய போது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் உயிரிழந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

அருப்புக்கோட்டை திருநகரத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன் என்பவரது மனைவி தில்லை சிவகாமி(52). அர்ச்சுணன் கடந்த ஒரு வருடத்திற்கு முன் இறந்த நிலையில் தில்லை சிவகாமி மன சோர்வுடன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தில்லை சிவகாமி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். டவுன் போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கோரிமேடு உதவி ஆய்வாளர் கோவிந்தன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 2 வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக அந்த வழியாக வந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சாரம் முத்துரங்கசெட்டி நகரைச் சேர்ந்த புவேனேஷ் (24), முதலியார்பேட்டையைச் சேர்ந்த பாலா (23) என்பதும்; அவர்களிடம் கஞ்சா இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.