India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர், பி.என்.ரோடு பூலுவப்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்தி சரவணகுமார் -சிவசங்கரி தம்பதியின் மகள் தக்சிதாஸ்ரீ. இவர் தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் 2 பாடங்களில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோர் கண்டித்ததால் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

போதை பொருள் நடமாட்டதை தடுக்க தூத்துக்குடி நகர சரக துணை போலீஸ் எஸ்.பி ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், கோயில்பிள்ளைவிளை, ஜார்ஜ் ரோடு பகுதியில் உள்ள வீடுகளில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 7 1/2 லிட்டர் கஞ்சா எண்ணெய் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக மரியநவமணி ஸ்மைலன் (37), மரிய அந்தோணி ஜேசுசகாயராஜ் (38) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம்: பூண்டியைச் சேர்ந்தவர்கள் விக்னேஷ் (20), அஜித்குமார் (18). நண்பர்களான இருவரும் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளனர். நேற்று இருவரும் பைக்கில் விழுப்புரம் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அரசு பஸ் மோதியதில், இருவரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். விக்னேஷ் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்பத்தியுள்ளது.

செங்கல்பட்டியில் ரூ.100 கோடி செலவில் கட்டப்படும் புதிய பேருந்து நிலையம் பிப்ரவரி மாத இறுதிக்குள் திறக்கப்படும். ஒரு பிரதான கட்டடம், 3 நுழைவாயில்கள், ஒரே நேரத்தில் 56 பேருந்துகள் நிறுத்தும் வசதி, தினம் 25,000 பயணிகள் பயன்பாடு, மலிவு விலை உணவகம், டார்மிடரி, மருத்துவ மையம், 34 கடைகள் மற்றும் பிற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர்கள், அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

R.S மங்கலம் அருகே பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சிவகங்கை, வெள்ளைச்சாமி 35, திருவாடானை, அய்யப்பன் 56, ஆகிய இருவரையும் சில நாட்களுக்கு முன் பெரியகீரமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மறைந்திருந்து போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 60க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதும், சிறையிலிருந்து திட்டம் தீட்டியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

R.S மங்கலம் அருகே பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சிவகங்கை, வெள்ளைச்சாமி 35, திருவாடானை, அய்யப்பன் 56, ஆகிய இருவரையும் சில நாட்களுக்கு முன் பெரியகீரமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மறைந்திருந்து போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது 60க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதும், சிறையிலிருந்து திட்டம் தீட்டியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை எதிர்வரும் 15.01.2026-ம் தேதியன்று சிறப்பாக கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை ரூ.3000 வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக புகார்கள் ஏதேனுமிருப்பின் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் மற்றும் 0424-2252052 தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம் என ஈரோடு கலெக்டர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார். (SHARE)

நாகை மாவட்டத்தில் அரசு உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறிய திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது அளிக்கப்பட உள்ளது. இந்த விருதுனை பெற விண்ணப்ப படிவங்களை <

குமரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் குட்கா, பான் மசாலா விற்பனை போன்றவைகளுக்காக ரூ.1.60 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 950 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (ஜன.7) தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து சோதனை நடைபெறும் எனவும் கூறினர்.

சிதம்பரம் மாரியப்பா நகரை சேர்ந்தவர் கலா (50). அண்ணாமலை பல்கலைக்கழக நூலகத்தில் பணிபுரிந்து வரும் இவர், நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாரியப்பா நகர் அருகே சென்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் கலா கழுத்தில் இருந்த 11 சவரன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.