Tamilnadu

News January 8, 2026

செங்கல்பட்டு: பற்றி எரிந்த பெற்ற வயிறு

image

செங்கல்பட்டு அடுத்த முள்ளிப்பாக்கம் கூட்டு சாலை, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 8வது மாடியில் இருந்து நவீன்(9) என்ற சிறுவன் கீழே விழுந்து பரிதாபமாக துடிதுடித்து உயிழந்தார். நேற்று சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோர்களிடன் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பெற்ற வயிறு பற்றி எரிவதாகவும், கட்டட பணிகள் முழுமையாக முடிக்கவில்லை, வாழ அச்சமாக உள்ளது என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News January 8, 2026

விருதுநகர்: EXAM இல்லை.. போஸ்ட் ஆபீஸ் வேலை ரெடி!

image

விருதுநகர் மக்களே அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஜன.15க்கு பிறகு இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News January 8, 2026

புதுவை: கால்நடை உரிமையாளர் மீது வழக்கு

image

நிரவி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வீரன்கோவில் தெரு அருகே ரோந்து சென்றார். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக பைபாஸ் சாலை சந்திப்பில்
மாடு ஒன்று சுற்றித்திரிந்தது. அதுபற்றி விசாரித்ததில், மேலஓடுதுறையைச் சேர்ந்த சுப்பிரமணியன் (70) என்பவரின் மாடு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது நிரவி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 8, 2026

பெரம்பலூர் கைவினை கலைஞர்களுக்குக் கடன் உதவி

image

பெரம்பலூர் ஆட்சியர் கூட்ட அரங்கில், கைவினை கலைஞர்களுக்குக் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, 16 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சம் மதிப்பில் தொழில் தொடங்குவதற்கான உத்தரவுக் கடிதம் அளித்த ஆட்சியர் ந.மிருணாளினி, “கைவினை கலைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் நோக்கில் கடந்த 6.12.2024 முதல் கலைஞர் கைவினைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.” என கூறினார்.

News January 8, 2026

திருவள்ளூரில் எலக்ட்ரிக் ரயில் இயங்காது!

image

தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னை செண்ட்ரல் – கூடூர் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று(ஜன.8) காலை செண்ட்ரலில் இருந்து 10:30 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டியில் இருந்து 10:55 மனிக்கு சென்னைகடற்கரை வரும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 8, 2026

தருமபுரி: விபத்தில் ஒருவர் பலி!

image

கவிசெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன்(48). விவசாயியான இவர், பாப்பாரப்பட்டி – பென்னாகரம் சாலையில் குண்டுகாரம்பள்ளம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த மோட்டர் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது, அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 8, 2026

கிருஷ்ணகிரி: நடுரோட்டில் குடுமிபிடி சண்டை

image

கிருஷ்ணகிரி அடுத்த வெங்கடாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ஜாகீர் மோட்டூரை சேர்ந்தவர்கள் லட்சுமணன் (46) மற்றும் கனகராஜ் (19). நேற்று (ஜன.7) அப்பகுதியில் நடைபெற்ற பொங்கல் பண்டிகை பேச்சுவார்த்தையில் கனகராஜ் மற்றும் லட்சுமணன் தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் அடைப்படையில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 8, 2026

நீலகிரி: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு – Apply பண்ணுங்க!

image

நீலகிரி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தை பெற, குடும்ப அட்டை, ஆதார்,வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 1800425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க

News January 8, 2026

மயிலாடுதுறை மாவட்டத்தில் 5414 வழக்குகள் பதிவு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2025ஆம் ஆண்டில் மதுவிலக்கு குற்றங்கள் தொடர்பாக 5414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5473 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுக்கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 14 பேர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மதுவிலக்கு குற்றங்களின் ஈடுபடுபவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி தெரிவித்துள்ளார்

News January 8, 2026

கரூர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே கிளிக் <<>>செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!