India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திண்டுக்கல் மக்களே பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நாமக்கல் மக்களே பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கொங்கராயனூரைச் சேர்ந்தவர் தக்ஷிணாமூர்த்தி (35). விவசாயியான இவர் கடந்த ஜன.5 அன்று மேல்பட்டாம்பாக்கம் செக் போஸ்ட் அருகே டிராக்டரில் சென்று கொண்டிருந்த போது, பி.என். பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் வழி விடாமல் நடந்து சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் தட்சிணாமூர்த்தியை சுரேஷ் கட்டையால் தாக்கியதில், தக்ஷிணாமூர்த்தி நேற்று உயிரிழந்தார். இதையடுத்து நெல்லிக்குப்பம் போலீசார் சுரேஷை கைது செய்தனர்.

காட்பாடி, கரிகிரி பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முரளிதரன் (50) மற்றும் சிஆர்பிஎப் வீரர் தாமோதரன் (37) ஆகியோருக்கு இடையே நில தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் விடுமுறையில் வந்த தாமோதரனுக்கும், முரளிதரனுக்கும் நேற்று (ஜன.7) மீண்டும் ஏற்பட்ட தகராறில் தாமோதரன் முரளிதரனை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர.

சேலம் மாவட்டத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், பொங்கல் பரிசு பெறுவதில் ஏதேனும் குறைபாடுகளோ அல்லது சிக்கல்களோ இருந்தால்1967, 1800-425-5901 அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்கள் 0427-2415784, 7338721702, 0427-245943 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!ஷேர் பண்ணுங்க

சங்கராபுரம் அருகே சிவபுரத்தில் 38-க்கும் மேற்பட்டவர்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்த இடத்தை தங்களுக்கு பட்டா போட்டு தருமாறு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், தங்களுக்கு விரைந்து பட்டா வழங்க வலியுறுத்தி நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் வந்து சமாதானம் செய்த பின்னர் கலைந்து சென்றனர்.

ஆற்காடு ஜெகநாதசாமி தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஏ.ஆர்.சேட்டு (84). இவர் நேற்று (ஜன.7) வீட்டிலிருந்து ஆற்காடு அண்ணாசிலை பகுதிக்கு நடந்து சென்ற போது அவ்வழியாக சென்ற லாரி திடீரென அவர் மீது மோதியது. இதில் சேட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார். தகவலறிந்த ஆற்காடு டவுன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் விதிமுறைகளை மீறியதாக கடந்த ஓராண்டில் 1,550 வாகனங்களுக்கு ரூ.1 கோடியே 63 லட்சத்து 68 ஆயிரத்து 579 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இந்தாண்டும் தீவிர வாகன சோதனை நடைபெறும் எனவும், விதிமுறைகளை மீறும் ஆட்டோக்கள் சிறைபிடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 9, 10, 11 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை, விவசாயிகள் அவசியம் கடைபிடித்திட வேண்டும் என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை பெருமளவில் விவசாயிகள் தவிர்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி விசைப்பம்பு இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம் நேற்று(ஜன.7) நடைபெற்றது. இதில், தூய்மைக் காவலர்களுக்கு பொங்கல் கருணைத் தொகை ரூ.1,000, நிலவையில் உள்ள மாத ஊதியம், ரூ.25,000 மேல் காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லையெனில் நோட்டாவிற்கு வாக்களிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Sorry, no posts matched your criteria.